இன்று சனி நட்சத்திர பெயர்ச்சி.! 3 ராசிகளுக்கு வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?

Published : Mar 21, 2026, 03:05 PM IST

Saturn Transit In Uthrattathi On March 21 : மார்ச் 21, 2026 சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பெயர்ச்சி அடைந்திருக்கிறார். அவரின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
Saturn Transit In Uthrattathi On March 21

சனி பகவான் இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுவது போல ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். பஞ்சாங்கத்தின்படி மார்ச் 21 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் பெயர்ச்சியாக இருக்கிறார். 

சனி பகவானின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மங்களகரமானதாகவும், பொருளாதார ரீதியாக பலன் தருவதாகவும் கருதப்படுகிறது. மேலும் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருவதால் சில ராசிகள் சிறப்பான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மேஷம்

சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சி மேஷ ராசி காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். சனி பகவான் மேஷ ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். மேலும் ஏழரை சனியின் முதல் கட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு நடைபெறுகிறது. இந்த சூழலில் சனியின் நட்சத்திர மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதியைத் தரும். 

நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த உடல் நோய்கள் மற்றும் உபாதைகளில் இருந்து விடுபடுவீர்கள். செலவுகள் படிப்படியாக குறையும். பொருளாதார ரீதியாக ஆதாயம் பெறுவீர்கள். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட காலமாக உங்களை வாட்டி வதைத்து வந்த பிரச்சனைகள் குறைவதை கண்கூடாக காண்பீர்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.

35
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இருப்பினும் அவர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி அடைவதன் காரணமாக நேர்மறையான மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தின் ஒட்டுமொத்த சூழலும் மகிழ்ச்சிகரமானதாக மாறும். வாழ்க்கையில் முன்னேற்றம் பெறுவதற்கான வழிகள் திறக்கும். 

வேலை மற்றும் தொழில் முயற்சியில் ஆதாயத்தைப் பெறுவீர்கள். குடும்பம் சார்ந்த விஷயங்களில் நல்ல செய்திகள் வந்து சேரும். புதிய வேலைகள் கிடைக்கலாம். நிதி நிலை முன்பை விட வேகமாக முன்னேறும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கலாம். உங்கள் பொருளாதார நிலை மேம்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

45
தனுசு

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். மேலும் அவர் உத்திரட்டாதி நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்திற்கு மாறிய பின்னர், சாதகமான மாற்றங்கள் நிகழக்கூடும். தொழிலில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். எதிரிகள் விலகுவார்கள். போட்டி பொறாமைகள் குறையும். மன உளைச்சல் நீங்கும். 

நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். தாயாரின் உடல்நிலையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். மாத சம்பளத்திற்கு வேலை பார்த்து வருபவர்களுக்கு பணியிட மாற்றம் கிடைக்கலாம். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் கைக்கு கிடைக்கும். எதிரிகளை வென்று வெற்றி வாகை சூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

55
சனி பகவானின் அருளைப் பெற

சனி பகவானின் அருளைப் பெற சனிக்கிழமைகளில் சனி பகவான் சன்னிதியில் எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு தயிர்சாதம் அல்லது அன்னதானம் வழங்குவது சிறப்பு. 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' இந்த மந்திரத்தை தினமும் மூன்று முறை உச்சரிப்பது நன்மைகளைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories