ரேவதி நட்சத்திரத்தில் அமரும் சனி பகவான்.! அடுத்த 5 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.!

Published : May 05, 2026, 03:08 PM IST

Saturn Transit 2026 : சனி பகவான் விரைவில் புதன் பகவானின் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
Saturn Transit 2026

வேத ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றும் அவர், ஐந்து மாதத்திற்கு ஒரு முறை தனது நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். தற்போது உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பயணித்து வரும் அவர், மே 17ஆம் தேதி ரேவதி நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாக இருக்கிறார்.

26
சனி நட்சத்திரப் பெயர்ச்சி 2026

ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் ஆவார். சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் அவர் அக்டோபர் ஒன்பதாம் தேதி வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார். சனி பகவானின் நட்சத்திரப் பெயர்ச்சியால் மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெற உள்ளனர். அது குறித்து இங்கு விரிவாக காணலாம்.

36
ரிஷபம்

சனி பகவான் தனது நிலையை மாற்றுவது ரிஷப ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்க உள்ளது. ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வருமானத்தில் நல்ல அதிகரிப்பை காண்பீர்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த ஆசைகள் நிறைவேறும். அரசு தொடர்பான வேலைகள் வெற்றிகரமாக முடியும். தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள். வெளிநாடு செல்ல நினைப்பவர்களின் ஆசைகள் நிறைவேறும். தொழிலில் எதிர்பாராத வளர்ச்சியைக் காண்பீர்கள். மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள். இதுவரை வாட்டி வதைத்து வந்த கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

46
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவான் பெயர்ச்சியானது நேர்மறையான மாற்றங்களை கொடுக்க உள்ளது. தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். பாதியில் நின்ற பணிகள் வேகம் எடுக்கும். அதிகாரமிக்க பதவிகள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கையில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உண்டு. வர வேண்டிய பாக்கிகள் வந்து சேரும். வியாபாரத்தில் இருந்து வந்த எதிரிகள் விலகுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடல்நலம் சீராக இருக்கும். இல்லத்திலும், உள்ளத்திலும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

56
கன்னி

சனி பகவான் தனது நட்சத்திரத்தை மாற்றுவது கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான பலன்களை கொண்டு வரும். உங்கள் திட்டங்கள் ஒவ்வொன்றும் நிறைவேறத் தொடங்கும். உங்களை நாடி வந்தவர்களுக்கு நன்மைகளை செய்து மகிழ்வீர்கள். சகோதரர்களின் வழியில் உதவி கிட்டும். நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். வெளி உலகத் தொடர்புகள் விரிவடையும். வருங்காலத்திற்கான சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். திருமண வரன்கள் வீடு தேடி வரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நல்லபடியாக முடியும்.

66
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories