Saturn Transit 2025 in Pisces these 3 Lucky Zodiac Signs Getting Money : ஜோதிட சாஸ்திரத்தில் மிக முக்கியமான கிரங்களில் ஒருவர் தான் சனி பகவான். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகக் கூடியவர். நீதிமான், மந்தக்காரகன் என்றும் அழைக்கப்படுவார். ஒருவருக்கு அவர் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை கொடுக்க கூடியவர். சிவபெருமானிடம் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்.
Saturn Transit 2025 in Pisces Top 3 Lucky Zodiac Signs in Tamil
வரும் 29ஆம் தேதி சனிக்கிழமை சனி பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அதுவும் 30 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீன ராசிக்கு சனி பகவான் சஞ்சாரம் செய்கிறார். இது குரு பகவானுக்குரிய ராசி. மீன ராசிக்கு அதிபதியே குரு பகவான். அப்படி மீன ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் குறிப்பிட்ட ராசியினருக்கு வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த போகிறார். சனி பகவானின் இந்த ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், சனியின் அருள் கிடைக்க கூடிய அதிர்ஷ்டசாலி ராசியினர் யார் என்று இந்த தொகுப்பில் நாம் முழுவதுமாக பார்க்காலம்.
Sani Peyarchi For Kanni Rasi, Sani Peyarchi For Meena Rasi
ரிஷப ராசிக்கான சனி பெயர்ச்சி 2025 பலன்:
சனியின் அருள் கிடைக்க கூடிய ராசிகளில் ரிஷப ராசியும் ஒன்று. இந்த ராசிக்கு சனி பகவான் 11ஆவது வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். ஜோதிடத்தில் 11ஆவது வீடு என்பது லாப ஸ்தானம். தொழில் லாபம், வருமானம், பல வழிகளில் வருமானத்தை குறிக்க கூடிய இடம். இதன் காரணமாக இந்த சனி பெயர்ச்சி ரிஷப ராசிக்கு பொருளாதாரத்தில் ஏற்றத்தை கொடுக்க போகிறது. பணத்தட்டுப்பாடு இருக்காது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்வீர்கள், வெளியூர், வெளிநாடு செல்லும் யோகம் தேடி வரும். நீங்கள் கொடுத்து வராமலிருந்த பணம் கூட திரும்ப கிடைக்கும். முதலீட்டு லாபம் கிடைக்கும். எல்லையில்லா மகிழ்ச்சி நிலவும்.
Libra Pisces and Taurus Zodiac Signs in Tamil, Sani Peyarchi For Kanni Rasi
கன்னி ராசிக்கான 2025 சனி பெயர்ச்சி பலன்:
கன்னி ராசியைப் பொறுத்த வரையில் சனி பகவான் 7ஆவது வீட்டில் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். 7ஆவது ஸ்தானம் உறவுகளைப் பற்றியது. பரம்பரை சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். விலகியிருந்த உறவுகள் விரும்பு வந்து இணைவார்கள். கொடுத்த பணம் உங்களைதேடி வரும். குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவீர்கள் எதிரிகள் விலகுவார்கள். கூட்டாக இருந்து தொழில் செய்யும் எண்ணம் மேலோங்கம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
Saturn Transit 2025 Palan in Tamil
மீன ராசிக்கான சனி பெயர்ச்சி 2025 பலன்:
மீன ராசியிலேயே சனி பகவான் சஞ்சாரம் செய்ய் இருக்கிறார். இது உங்களது குணங்களை மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டும். நீங்கள் எப்படிப்பட்டவர், உடல்நலம், மனநிலை ஆகியவற்றை பிரதிபலிக்கும். புதிய தொழில் தொடங்க திட்டம் மேலோங்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தை அதிகரிக்கும் வழிகள் தென்படும். கோர்ட் வழக்குகள் இருந்தால் உங்களுக்கு சாதகமாக முடியும்.