விசுவாவசு தமிழ் புத்தாண்டு பலன்: இந்த ராசிகளுக்கு காசு, பணம் கொட்டப் போகிறது!!
Tamil Puthandu Visuvaavasu Palan Predictions : விசுவாவசு தமிழ் புத்தாண்டில் சிறப்பான பலனை அனுபவிக்க கூடிய ராசியினர் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil Puthandu Visuvaavasu Palan Predictions : விசுவாவசு தமிழ் புத்தாண்டில் சிறப்பான பலனை அனுபவிக்க கூடிய ராசியினர் யார் யார் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Tamil Puthandu Visuvaavasu Palan Predictions : 2025 ஆம் ஆண்டில் குரோதி வருடம் முடிந்து வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு (Tamil New Year 2025) பிறக்கிறது. ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளை நாம் தமிழ் புத்தாண்டு தினமாக கொண்டாடுகிறோம். இந்த புத்தாண்டு விசுவாவசு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. தற்போது குரோதி வருடம் நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 13 ஆம் தேதியுடன் குரோதி வருடம் முடிந்து ஏப்ரல் 14ஆம் தேதி விசுவாவசு (Visuvaavasu Tamil Puthandu) என்ற தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
பொதுவாக திருமண அழைப்பிதழ்களில் தமிழ் வருடத்தின் பெயர், திதி, நட்சத்திரம், யோகம் என்று எல்லாவறையும் குறிப்பிட்டு தான் பத்திரிக்கை அடிப்பார்கள். நல்ல காரியங்கள் எல்லாவற்றிலும் தமிழ் வருடம் பின்பற்றப்படும். அப்படி கடைபிடிக்கப்படும் தமிழ் புத்தாண்டில் எந்தெந்த ராசியினருக்கு யோகம் தேடி வரப் போகிறது, யாருக்கு ஜாக்பாட் அடிக்கும், எந்த ராசியினருக்கு வேலை கிடைக்கும், யாருக்கு திருமணம் நடைபெற்று குழந்தை பாக்கியம் அமையும் என்பது பற்றியெல்லாம் இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டில் கிரக நிலைகளின் மாற்றங்கள் மேஷத்தில் சூரியன் சஞ்சாரம் செய்ய இருக்கிறார். ரிஷபத்தில் குருவும், கடத்தில் செவ்வாயும், கன்னியில் கேதுவும், துலாம் ராசியில் சந்திரனும் சஞ்சாரம் செய்வார்கள். அதுமட்டுமின்றி புத்தாண்டின் தொடக்கத்தில் 4 முக்கிய கிரகங்களான சனி, சுக்கிரன், புதன் மற்றும் ராகு ஆகிய கிரகங்கள் மீன ராசியினர் பயணம் செய்வார்கள். மேலும், வரும் 29ஆம் தேதி நிகழக் கூடிய சனி பெயர்ச்சியானது ஒவ்வொரு பஞ்சாங்கத்தின்படி நேரம் காலம் மாறுபடுகிறது.
ஆனால், நாம் பின்பற்றக் கூடிய திருக்கணித பஞ்சாங்கத்தின்படி வரும் 29ஆம் தேதி இரவு 10.07 மணிக்கு சனி பெயர்ச்சியானது கும்பத்திலிருந்து முற்றிலுமாக விலகி மீனத்திற்கு பெயர்ச்சியாகிறது. இந்த ஆண்டில் நிகழக் கூடிய பெயர்ச்சிகளில் சனி பெயர்ச்சியும் 2025 முக்கியமான பெயர்ச்சியாக கருதப்படுகிறது.
இனி விசுவாசவசு தமிழ் புத்தாண்டில் இந்த 5 ராசியினர் வாழ்க்கையில் வசந்த காலம் வீசப் போகிறது. அந்த ராசிகளில் தனுசு, மகரம், கன்னி, மிதுனம், ரிஷபம் ஆகிய ராசிகள் இடம் பெற்றுள்ளன.
மகரம் ராசிக்கான தமிழ் புத்தாண்டு ராசி பலன்:
இந்த ராசியைப் பொறுத்த வரையில் தமிழ் புத்தாண்டு சிறப்பான பலனை தரக் கூடிய ஒரு ஆண்டாக இருக்க போகிறது. ஏற்கனவே மகர ராசிக்கான ஏழரை வருடமும் முடிய போகிறது. இதுவே பெரிய நிம்மதி. அதுமட்டுமின்றி இதுவரையில் ஏழரையில் இழந்த எல்லாமும் இப்போது திரும்ப கிடைக்க போகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதற்கான பலனை மகர ராசியினர் அனுபவிக்க போகிறார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களால் உங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும். சொந்தமாக தொழில் செய்பவராக இருந்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படுவதை பார்க்கலாம். வருமானத்திற்கான வழி கிடைக்கும். அதன்மூலமாக பொருளாதார பிரச்சனை சீராகும். காதல், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு பலன்:
கன்னி ராசியைப் பொறுத்த வரையில் தமிழ் புத்தாண்டு உங்களுக்கு சாதகமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். சனி பகவானின் அருளும், ஆசியும் உங்களுக்கு கிடைக்க போகிறது. தொழில் சிறப்பாக இருக்கும். வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தனுசு ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்:
தனுஷ் ராசியைப் பொறுத்த வரையில் விசுவாவசு தமிழ் புத்தாண்டில் ஏராளமான நன்மைகள் உங்களை தேடி வரப் போகிறது. குரு பெயர்ச்சியும் உங்களுக்கு எல்லா பிரச்சனைகளையும் தீர்த்து கொடுக்க போகிறது. புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்வதை நீங்கள் கண் கூடாக பார்க்கலாம். எனினும், உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மார்ச் 29ஆம் தேதி சனி பெயர்ச்சி இல்லையா.? திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர கோயில் முக்கிய அறிவிப்பு
ரிஷப ராசிக்கு தமிழ் புத்தாண்டு பலன்:
ரிஷப ராசியைப் பொறுத்த வரையில் தமிழ் புத்தாண்டு பல நன்மைகளை கொண்டு வந்து தரப் போகிறது. எல்லா காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி தேடி வரும். உங்களது ஆசைகள் யாவும் நிறைவேறும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
மிதுன ராசிக்கான விசுவாவசு தமிழ் புத்தாண்டு பலன்:
மிதுன ராசியைப் பொறுத்த வரையில் தமிழ் புத்தாண்டில் அடுத்தடுத்து நிகழக் கூடிய சனி மற்றும் குருவின் பெயர்ச்சி சாதகமான பலனைத் தரபோகிறது. வேலையில் முன்னேற்றம் இருக்கும். புதிதாக தொழில் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், முன்னேற்றமும் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி தருவதாக அமையும்.