Navpancham Rajyog 2025: 30 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் மற்றும் சனி பகவான் இணைந்து சக்தி வாய்ந்த ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஜோதிடத்தின்படி நவம்பர் 17ஆம் தேதி சூரியன் தனது ராசியை மாற்றி விருச்சிக ராசிக்குள் நுழைகிறார். அப்போது அவர் சனி பகவானுடன் குறிப்பிட்ட கோணத்தில் அமைந்து நவபஞ்சம ராஜயோகத்தை உருவாக்குகிறார். ஒரு கிரகம் தான் இருக்கும் ராசியில் இருந்து ஐந்தாவது (பஞ்சம) அல்லது ஒன்பதாவது (நவம) இடத்தில் மற்றொரு கிரகம் இருக்கும் பொழுது இந்த யோகம் உருவாகிறது. நவம்பர் 17 அன்று சூரியன் ஒரு ராசியிலும் சனி அதற்கு ஐந்தாம் அல்லது ஒன்பதாம் ராசியிலும் சஞ்சரிக்கும் நிலை உருவாகிறது. இதுவே நவபஞ்சம யோகமாக கருதப்படுகிறது.
25
நவபஞ்சம ராஜயோகம் 2025
ஜோதிடத்தில் சூரியனும், சனியும் பகை உணர்வு கொண்ட கிரகங்களாக கருதப்படுகிறார்கள். இருப்பினும் அவர்களின் இந்த இணைவு சில ராசிக்காரர்களுக்கு ராஜயோக பலன்களை அளிக்க இருக்கிறது. இந்த யோகம் எதிர்பாராத அதிர்ஷ்டம், நிதி வளர்ச்சி, வெற்றி மற்றும் தன்னம்பிக்கை அதிகரிப்பு போன்ற நேர்மையான பலன்களை தரக்கூடியது. நவம்பர் 17 அன்று உருவாகும் சனி சூரியனின் நவபஞ்சம யோகத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
35
மீனம்
நவபஞ்சம ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அனுபவிப்பீர்கள். சனி உங்கள் ராசியில் லக்னத்தில் இருக்கும் நிலையில் சூரிய பகவான் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குழப்பத்தில் இருந்து விடுபட்டு, துணிச்சலுடன் முடிவுகளை எடுத்து வெற்றியைப் பெறுவீர்கள்.
வேலை செய்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய முயற்சிகள் அல்லது தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். பணத்தை சேமிக்க வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரம் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
விருச்சிக ராசியின் முதல் வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிக்க இருப்பது விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பான நன்மையைத் தரும். நிலுவையில் சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரும். பல வழிகளில் இருந்து வருமானத்திற்கான ஆகாயங்கள் உருவாகும். எதிர்பாராத நிதி ஆகாயங்கள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கத் தொடங்கும்.
சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்து இருந்த சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. வருமானம் பெருகுவதால் புதிய வீடு கட்டுதல், மனை வாங்குதல், தொழில் தொடங்குதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவீர்கள். பணத்தை சேமிப்பதற்கான முயற்சிகள் கைகூடும்.
55
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம ராஜயோகம் திடீர் பணவரவுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தும். திடீரென்று நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் உருவாகலாம். நிதி நிலைமை மிகவும் சீராக இருக்கும். குடும்பத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, மகிழ்ச்சி அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும். வணிகம் அல்லது சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு வாடிக்கையாளர்களில் உயர்வால் லாபம் அதிகரிக்கும்.
தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். எதிரிகள், போட்டியாளர்கள் விலகுவார்கள். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஆர்டர்கள் மூலம் லாபம் ஈட்டுவார்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த ஒப்பந்தம் திடீரென கையெழுத்தாகும். மூதாதையர் சொத்துக்களில் இருந்து லாபம் கிடைக்கும்.