Saturn Retrograde 2026: சனி வக்ரகதியில்.. பணவரவும், பதவி உயர்வும் பெறும் 3 ராசிகள்! உங்க ராசி இருக்கா?

Published : Jul 06, 2026, 03:19 PM IST

Saturn Retrograde 2026: முக்கியமான கிரக மாற்றங்களில் ஒன்றாக கருதப்படும் சனி வக்ரகதி, ஜூலை 27, 2026 முதல் தொடங்குகிறது. சில ராசிக்காரர்களுக்கு வருமான உயர்வு, வேலை முன்னேற்றம் மற்றும் நீண்டநாள் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

PREV
16
சனி வக்ரகதி 2026

சனி பகவானின் பெயர்ச்சி, வக்ரகதி போன்ற மாற்றங்கள் ஜோதிடத்தில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன. குறிப்பாக தொழில், பணவரவு, பொறுப்புகள் மற்றும் வாழ்க்கையின் நீண்டகால முன்னேற்றம் தொடர்பாக சனியின் தாக்கம் அதிகம் பேசப்படுகிறது. அந்த வகையில், 2026 ஜூலை 27 முதல் சனி தனது வக்ரகதியை தொடங்க உள்ளதாக ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன. சனி வக்ரகதி என்பது சனி கிரகம் பின்னோக்கி நகர்வது போல தோன்றும் வானியல் நிகழ்வு. ஜோதிடம் இது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு விதமான பலன்களை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

26
சனி பெயர்ச்சி பலன்

சிலருக்கு சவால்கள் அதிகரிக்கலாம். அதே நேரத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள், நிதி முன்னேற்றம் மற்றும் நீண்டநாள் முயற்சிகளின் பலன் கிடைக்கக்கூடும். இந்த வக்ரதியின் தாக்கத்தால் விருச்சிகம், மீனம் மற்றும் மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். வருமான உயர்வு, பதவி உயர்வு, நிலுவையில் இருந்த நிறைவு போன்ற புதிய வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மாடுமாதிரி உழைச்சாலும் சக்சஸ் லேட்டா தான் கிடைக்குமாம்

36
விருச்சிக ராசி பலன்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகலாம். பணிபுரிபவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கக்கூடும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்பத்தினர் மற்றும் பணியிட சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கலாம். நீண்ட காலமாக தடைபட்டிருந்த வேலைகள் மீண்டும் தொடங்கி வெற்றிகரமாக முடியும் என்ற சாத்தியமும் உள்ளது.

46
மீன ராசி பலன்

மீனம் ராசிக்காரர்களுக்கு நிதிநிலை மெதுவாக முன்னேற்றம் காணலாம். புதிய வருமான வாய்ப்புகள் உருவாகலாம். இதுவரை செய்த கடின உழைப்பிற்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஒழுக்கத்துடனும் பொறுப்புடனும் செயல்படுபவர்களுக்கு சனியின் தாக்கம் நல்ல பலனை அளிக்கும் என்று கூறப்படுகிறது. வேலை மற்றும் தொழில் இரண்டிலும் வளர்ச்சி.

56
மகர ராசி பலன்

மகரம் ராசிக்காரர்களுக்கும் இந்த வக்ரகதி சாதகமாக அமையும் என்று ஜோதிடர்கள் கருதுகின்றனர். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் நல்ல லாபத்தை அளிக்கக்கூடும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவும். திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிக்கவும், தொழில் முன்னேற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் ஏற்ற காலமாக இது அமையலாம்.

66
சனி பகவான் பலன்

ஜோதிட நம்பிக்கையின்படி, சனி பகவானின் அருளைப் பெற இந்தக் காலத்தில் ஒழுக்கத்துடனும் நேர்மையுடனும் செயல்படுவது நல்லதாகக் கருதப்படுகிறது. தேவையுள்ளவர்களுக்கு உதவுதல், பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துதல் போன்ற நல்ல செயல்களை கடைப்பிடிப்பது சுபபலன்களை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

குறிப்பு: இந்த தகவல்கள் ஜோதிடக் கருத்துகள் மற்றும் பொதுவாக கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. கிரக பலன்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம், தசாபுத்தி மற்றும் பிற ஜோதிட காரணிகளின் அடிப்படையில் மாறுபடலாம். எனவே இதை அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக அல்லாமல், ஜோதிட நம்பிக்கையாகவே பார்க்க வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories