30 ஆண்டுகளுக்குப் பின் கை கோர்க்கும் சனி செவ்வாய்.! மே 10 வரை இந்த 5 ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.!

Published : Apr 08, 2026, 11:04 AM IST

Saturn Mars Conjunction in Meena Rasi: 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் சனி மற்றும் செவ்வாய் பகவான் இருவரும் இணைய இருக்கின்றனர். இதன் காரணமாக பலன் பெற உள்ள ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
17
Saturn Mars Conjunction in Meena Rasi

வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து, பிற கிரகங்களுடன் இணைந்து சுபயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் செவ்வாய் மற்றும் சனி பகவானின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் தைரியம், வீரம், ஆற்றல், துணிச்சல் ஆகியவற்றின் காரகராகவும், சனி பகவான் நீதிமானாகவும் அறியப்படுகின்றனர்.

27
மீன ராசியில் சனி செவ்வாய் சேர்க்கை

இந்த நிலையில் செவ்வாய் பகவான் ஏப்ரல் 2 ஆம் தேதி மீன ராசியில் நுழைந்து சனி பகவானுடன் இணை இருக்கிறார். இதனால் சனி மங்கள யோகம் உருவாகி இருக்கிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு கிரகங்களும் ஒன்றாக பயணித்து வருகின்றனர். இந்த சேர்க்கை மே 10 ஆம் தேதி வரை நீடிக்க இருக்கிறது. சனி மங்கள யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சுப பலன்களை கொடுத்தாலும், 5 ராசிக்காரர்கள் அதிகபட்ச பலன்களை பெற உள்ளனர். அது குறித்து இங்கு காணலாம்.

37
ரிஷபம்

ரிஷப ராசியின் 11 வது வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கையால் சனி மங்கள யோகம் உண்டாக இருக்கிறது. இந்த வீடு லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். நிதிநிலை மேம்படும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு வாய்ப்புகள் கைகூடும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நிதியுதவி கிடைக்கும். பணியில் இலக்கை அடைந்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

47
மிதுனம்

மிதுன ராசியின் பத்தாம் வீட்டில் சனி மற்றும் செவ்வாயும் சேர்க்கை நிகழவுள்ளது. இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களின் நிதிநிலைமை மேம்படும். பத்தாம் வீடு கர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுவதால் தொழில் ரீதியான சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். பணவரவு அதிகரிக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கடன் தொல்லைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள்.

57
சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆம் வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் கிடைக்க வாய்ப்புள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு, வாகனம், நகை ஆபரண சேர்க்கை நடைபெறும். கார் போன்ற ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். ஆரோக்கியப் பிரச்சனைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நலம் மேம்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும்.

67
துலாம்

துலாம் ராசியின் ஆறாம் வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்களின் கடன் பிரச்சனைகள் குறையும். நிதி நிலைமை மேம்படும். உங்கள் வாழ்க்கையை மாற்றும் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். தொழில் சிறக்கும். வணிகம் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். செல்வாக்கு மிக்கவர்களில் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும்.

77
கும்பம்

கும்ப ராசிக்கு 2-ம் வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. இந்த நேரத்தில், உங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். இதனால் வீட்டில் நிம்மதியான சூழல் உருவாகும். ஆனால், இந்த நேரத்தில் உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான முடிவுகளை அனைவருடனும் ஆலோசித்து எடுப்பது நல்லது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories