
நவகிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக சனி பகவான் இருக்கிறார். இவர் ஒரு ராசியில் சுமார் இரண்டரை ஆண்டுகள் வரை தங்கி இருக்கிறார். தற்போது மீன ராசியில் வக்கிர நிலையில் சனிபகவான் பயணித்து வருகிறார். வழக்கமாக மெதுவாக செயல்படும் இவர் உச்சகட்டத்தில் சுதந்திரமாகவும், விரைவாகவும் செயல்படுகிறார். இது சில ராசிக்காரர்களுக்கு விரைவான முன்னேற்றத்தை வழங்க இருக்கிறது. குறிப்பாக சனி உச்சகட்டத்தை அடையும் பொழுது ஆறு ராசிகளுக்கு அதிக யோகங்களை வழங்குவார் என்று கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷப ராசியின் 11 ஆம் வீட்டில் சனிபகவான் சஞ்சரிப்பதால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்க உள்ளது. வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் அல்லது வியாபாரம் செய்து வருபவர்களுக்கு லாபம் அபரிமிதமாக அதிகரிக்கும். குடும்பத்தில் தடைபட்டு இருந்த சுப நிகழ்ச்சிகள் வேகமெடுக்கும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கலாம். வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும்.
மிதுன ராசியின் பத்தாவது வீட்டில் சனிபகவான் சஞ்சரிக்க இருக்கிறார். பத்தாம் வீடு வேலை ஸ்தானமாகும். இங்கு சனி உச்சநிலை அடையும் பொழுது, மிதுன ராசிக்காரர்கள் வேலை விஷயமாக பல நல்ல பலன்களை பெற உள்ளனர். பணியில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டு சலுகைகள் கிடைக்கும். வேலையில் அடுத்தடுத்த பதவி உயர்வுகள் கிடைக்கலாம். பணியிடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீர்ந்து மன நிம்மதி ஏற்படும். வேலைப்பளு காரணமாக இருந்த மன அழுத்தம் நீங்கும். வேலை சுமையிலிருந்து விடுபடுவீர்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பார்த்ததை விட பன்மடங்கு லாபம் கிடைக்கும்.
கடக ராசியின் ஒன்பதாவது வீட்டில் சனியின் உச்ச சஞ்சாரம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் என இரண்டிலும் கடக ராசிக்காரர்கள் மிகுந்த பலன்களை அனுபவிக்க உள்ளனர். இவர்களுக்கு பல வழிகளில் வருமானத்திற்கான ஆதாரம் திறக்கும். கடன் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு கடன் பிரச்சனை தீர உள்ளது. உடல் ஆரோக்கியம் குன்றி இருந்தவர்களுக்கு ஆரோக்கியம் மேம்பட்டு மன நிம்மதி கிடைக்கும். திருமண முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரலாம். மாணவர்கள் படிப்பு மற்றும் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான சாதகமான காலம் நெருங்கியுள்ளது.
துலாம் ராசியின் ஆறாம் வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் விரைவான முன்னேற்றத்தை காண இருக்கிறீர்கள். தொழிலில் இதுவரை இறந்த போட்டியாளர்கள், எதிரிகள் அனைவரும் விலகுவதால் உங்கள் தொழில் மேம்பட வாய்ப்பு உள்ளது. சிறிய தொழிலாக நடத்தி வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு உள்ளது. தொழிலுக்காக கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, கடன் கிடைக்க வாய்ப்பு உண்டு. உங்கள் பேச்சாற்றல் மூலம் தொழில் விரிவுபடும். இதன் காரணமாக லாபம் அதிகரிக்கும். உடல்நலப் பிரச்சினைகள் தீரும் குடும்பத்தில் சுப காரியங்கள் அடுத்தடுத்து நடைபெறும். திடீர் பண ஆதாயங்கள் ஏற்படலாம்.
விருச்சிக ராசியின் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் சஞ்சரிப்பதால் விருச்சிக ராசிக்காரர்கள் சமூகத்தில் உயர்ந்த மதிப்பு மரியாதையை பெறுவீர்கள். நீங்கள் ஏற்கனவே முதலீடு செய்திருந்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கலாம். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும் பரம்பரை சொத்துக்களில் ஏதேனும் வில்லங்கம் இருந்தால் அனைத்தும் தீர்ந்து பணம் கைக்கு வரும். நிலம், மனை, கட்டிடம் வாங்கும் யோகம் உண்டு. புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியிலும் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வருமானம் இரட்டிப்பாகும். நிதி, பங்குகள் மற்றும் பிற முதலீடுகளில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம்.
மகர ராசியின் அதிபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் தனது சொந்த ராசிக்காரர்களுக்கு அள்ளி வழங்க இருக்கிறார். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். நீங்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும். பல திசைகளில் இருந்தும் உங்களுக்கு நன்மை வந்து சேரும். சொத்து தகராறுகள் தீர்க்கப்பட்டு பணம் கைக்கு வந்து சேரும். உங்களுக்கு ஏதேனும் வழிகளில் பணம் கைக்கு வராமல் சிக்கியிருந்தால், அந்த பணமும் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். வேலையில்லாதவர்களின் கனவு நனவாகும். திருமணமாகாதவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிடம், பஞ்சாங்கம், மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவதன் மட்டுமே எங்கள் நோக்கமாகும். இந்த தகவல்களை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களின் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் மாறுபடும் என்பதால் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள அனுபவமிக்க ஜோதிடரை அணுகுவது நல்லது)