Astrology: இந்த 4 ராசிக்காரங்களுக்கு திருமணம் என்றாலே அலர்ஜியாம்.! கல்யாண பேச்சு எடுத்தாலே கடுப்பாவாங்களாம்.!

Published : Sep 15, 2025, 01:54 PM IST

Zodiac signs who hate marriage : ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்கள், திருமணத்தை வெறுப்பவர்களாக உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
16
திருமணத்தை விரும்பாத 4 ராசிக்காரர்கள்

திருமணம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான மைல் கல் ஆகும். சிலர் திருமண வாழ்க்கையை அதிகம் விரும்புவதில்லை. அதற்கு அவர்களின் தனிப்பட்ட குணங்கள், வாழ்க்கை முறை மற்றும் அவர்கள் விஷயங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமைகள் ஆகியவை காரணமாக இருக்கலாம். ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசியும் தனித்துவமான குணங்களை கொண்டவை. இந்த குணங்கள் திருமணத்தைப் பற்றிய அவர்களின் பார்வையை பாதிக்கின்றன. இந்த கட்டுரையில் திருமணத்தை விரும்பாத நான்கு ராசிக்காரர்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

26
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரத்தை விரும்புபவர்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் சாகசங்கள் மற்றும் புதிய அனுபவங்கள் முக்கியமானவை. திருமணம் என்றால் பொறுப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் வரும் என்று அவர்கள் கருதுவதால், திருமணத்தின் மீது அவர்களுக்கு ஈடுபாடுகள் கிடையாது. தனுசு ராசிக்காரர்கள் தங்கள் தனிப்பட்ட இலக்குகளுக்கும், கனவுகளுக்கும் முன்னுரிமை கொடுக்கின்றனர். ஒரு நபருடன் நீண்ட காலமாக உறவில் இருப்பது அவர்களுக்கு சற்று சவாலாக இருக்கலாம். ஏனெனில் அவர்கள் தங்கள் சுதந்திரத்தை இழக்க விரும்புவதில்லை.

திருமணத்தின் காரணமாக வரும் குடும்ப பொறுப்புகள், அவர்களை தடுப்பதாக நினைக்கலாம். இருப்பினும் அவர்கள் காதலில் ஈடுபடுவதற்கு முற்றிலும் எதிரானவர்கள் அல்ல. உறவு என்பது சுதந்திரத்தை பறிக்காத வகையிலும், தங்கள் வாழ்க்கையை முழுமையாக ஆதரிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர்.

36
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் தனித்துவமான சிந்தனை மற்றும் புதுமையான அணுகுமுறையை கொண்டவர்கள். அவர்கள் பாரம்பரிய வழக்கங்களை பின்பற்றுவதை விட, தங்கள் போக்கில் வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். சமூகத்தின் விதிமுறைகளுக்கு ஏற்ப வாழ வேண்டும் என்கிற கட்டுப்பாடடு அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம். இது அவர்களுக்கு விருப்பமில்லாத ஒன்றாக இருக்கலாம். கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தனித்தன்மை வெளிப்படுத்துவதற்கும், தங்கள் யோசனையை பிறர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.

கும்ப ராசிக்காரர்கள் உணர்ச்சி ரீதியாக மிகவும் ஆழமாக ஈடுபடுவதை தவிர்ப்பவர்கள். திருமணத்தின் மூலம் வரும் உறவு அவர்களுக்கு அசௌகரியமாக தோன்றலாம். அவர்கள் தங்கள் நண்பர்கள், சமூக வட்டம் மற்றும் தனிப்பட்ட ஆர்வங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கலாம். எனவே திருமணத்தை விட அவர்கள் சுதந்திரமான உறவுகளையே அதிகம் விரும்புகின்றனர்.

46
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் மாற்றத்தை விரும்புபவர்கள். அவர்கள் ஒரே இடத்தில் நிலையாக இருப்பது கிடையாது. அதேபோல் ஒரே விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவது அவர்களுக்கு சவாலாக இருக்கலாம். திருமணம் என்பது ஒரு நீண்ட கால உறுதிப்பாடு என்பதால் அவர்களுக்கு திருமணம் குறித்த அச்சுறுத்தல் தோன்றலாம். புதிய மனிதர்களை சந்திப்பது, புதிய அனுபவங்களை பெறுவது, புதிய செயல்களில் ஈடுபடுவதையே அவர்கள் அதிகம் விரும்புகின்றனர்.

குடும்ப உறவுகளில் அவர்கள் ஈடுபட்டாலும் தனிப்பட்ட சுதந்திரத்தை பெரிதும் விரும்புகின்றனர். திருமணத்தின் மூலம் வரும் பொறுப்புகள் அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடாக உணரப்படலாம். இதன் காரணமாக அவர்கள் திருமணத்தை தவிர்க்கவோ அல்லது அதை பற்றி தீவிரமாக சிந்திக்காமல் இருக்கின்றனர்.

56
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சி மிகுந்தவர்கள். உறவுகளில் ஆழமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள். ஆனால் திருமணம் என்று வரும்போது அவர்களுக்கு சற்று சிக்கலாக தோன்றலாம். இவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் முழுமையான கட்டுப்பாட்டை விரும்புவார்கள். ஆனால் திருமணம் என்பது தனிப்பட்ட இடத்தை மற்றொரு நபருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கலாம். இது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

விருச்சிக ராசிக்காரர்களுக்கு திருமணம் போன்ற சமூக கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புகள் அவசியமில்லாதவையாகத் தோன்றலாம். தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதற்கு திருமணம் என்கிற அமைப்பு தேவை இல்லை என்று கருதலாம். இதுவே அவர்கள் திருமணத்தை வெறுப்பதற்கு காரணமாகவும் அமைகின்றன.

66
சுதந்திரத்தை மதிப்பவர்கள்

திருமணத்தை விரும்பாத இந்த நான்கு ராசிக்காரர்களும் தங்கள் தனிப்பட்ட சுதந்திரத்தையும், வாழ்க்கை முறையையும் மிகவும் மதிக்கின்றனர். இவர்கள் திருமணத்தை முற்றிலும் எதிர்ப்பவர்கள் அல்ல. திருமணத்தின் மூலம் வரும் கட்டுப்பாடுகள் மற்றும் பொறுப்புகள் அவர்களுக்கு விருப்பம் இல்லாதவையாக இருக்கலாம். ஒவ்வொரு ராசிக்காரர்களின் தனிப்பட்ட குணங்களும், அவர்களின் வாழ்க்கை முறையும் திருமணம் குறித்தான முடிவுகளை பாதிக்கின்றன.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிடம், பஞ்சாங்கம், மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவதன் மட்டுமே எங்கள் நோக்கமாகும். இந்த தகவல்களை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களின் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் மாறுபடும் என்பதால் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள அனுபவமிக்க ஜோதிடரை அணுகுவது நல்லது)

Read more Photos on
click me!

Recommended Stories