
பூமியில் மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தவறு செய்யக் கூடியவர்களே. சிலர் தவறுகளை ஒப்புக்கொள்வதற்கு தயங்குகின்றனர் அல்லது தான் செய்த தவறுகளை முற்றிலும் மறுக்கின்றனர். இது அவர்கள் பிறந்த ராசி மற்றும் அவர்களை ஆளும் கிரகங்களின் காரணமாக இருக்கலாம். சில ராசிக்காரர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ளாமல் தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக பிடித்துக் கொள்கின்றனர். இந்த கட்டுரையில் தவறுகளை ஒப்புக்கொள்ள தயங்கும் ஐந்து ராசிக்காரர்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
மேஷ ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம் நிறைந்தவர்கள். அவர்கள் எப்போதும் தங்களை வெற்றியாளர்களாகவே பார்க்க விரும்புகின்றனர். தவறு செய்து விட்டோம் என்று ஒப்புக்கொள்வது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. தங்கள் தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்வதற்கு பதிலாக தங்கள் செயல்களை நியாயப்படுத்த முயற்சிப்பார்கள். அவர்களின் தன்னம்பிக்கை மற்றும் தன்மானம் அவர்களை இந்த விஷயத்தில் பிடிவாதக்காரர்களாக மாற்றுகிறது. ஒரு மேஷ ராசிக்காரர் தவறான முடிவெடுத்து அது தோல்வியில் முடிந்தால், வெளிப்புற காரணங்களை குற்றம் சாட்டுவார்கள் அல்லது தங்கள் முடிவே சரியானது என நிரூபிக்க முயற்சிப்பார்கள்.
சிம்ம ராசிக்காரர்கள் கம்பீரமான ஆளுமை மற்றும் தலைமைப் பண்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் அனைவரின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க விரும்புவர்கள். தவறு செய்து விட்டோம் என்று ஒப்புக் கொள்வது அவர்களின் பெருமைக்கு களங்கம் விளைவிக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக செய்த தவறுகளை அவர்கள் ஒப்புக்கொள்ள தயங்குகின்றனர். தாங்கள் செய்த தவறுகளை மறைப்பதற்கு அல்லது அதை வேறு வழியில் சமாளிப்பதற்கு முயற்சி செய்வார்கள். ஒரு சிம்ம ராசிக்காரர் தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்வதற்கு பதிலாக தங்கள் செயல்களை புதிய கோணத்தில் விளக்கி தங்களை சரியானவர்களாக காட்ட முயற்சிப்பார்கள்.
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்கள் மற்றும் தங்கள் உணர்வுகளை தீவிரமாக வெளிப்படுத்துபவர்கள். தங்கள் தவறுகளை ஒப்புக் கொள்வதற்கு தயங்குவதற்கு காரணம் தங்களின் பலவீனம் வெளிப்பட்டுவிடும் என்கிற பயம்தான். இவர்கள் தங்கள் முடிவுகளில் உறுதியாக இருப்பார்கள். தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்வதற்கு பதிலாக அந்த தவறை நியாயப்படுத்த முயற்சிப்பார்கள். ஒரு விருச்சிக ராசிக்காரர் தவறான முடிவெடுத்தால், அதை ஒப்புக்கொள்ளாமல் தங்கள் உணர்ச்சிகளை மையப்படுத்தி மற்றவர்களை குற்றம் சாட்டுவார்கள்.
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கமான மற்றும் பொறுப்பான இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்போதும் ஒரு கட்டுப்பாட்டை கடைபிடிக்க விரும்புகிறார்கள். தவறு செய்து விட்டோம் என்று ஒப்புக்கொள்வது, கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக கருதுகின்றனர். இதன் காரணமாகவே அவர்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். தவறுகளை ஒப்புக் கொள்வதற்கு பதிலாக அதை மறுத்து மற்றவர்களை குற்றம் சாட்டுவார்கள் அல்லது சூழ்நிலைகளை காரணமாக கூறுவார்கள். ஒரு மகர ராசிக்காரர் தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்வதற்கு பதிலாக இது தன்னால் நேர்ந்த தவறு இல்லை என்று கூறி பொறுப்பை தட்டிக் கழிக்க முயற்சிப்பார்கள்.
கும்ப ராசிக்காரர்கள் தனித்துவமான மற்றும் சுதந்திரமான ஆளுமை கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கருத்துக்களில் உறுதியாக இருப்பார்கள். தவறு செய்தால் அது ஒப்புக்கொள்ள தயங்குவார்கள். தவறை ஒப்புக் கொள்வது அறிவுத்திறனுக்கு களங்கம் விளைவிக்கும் என்று அவர்கள் நினைப்பதால், தவறுகளை ஒப்புக் கொள்வதற்கு மறுக்கின்றனர். தங்கள் செயல்களை நியாயப்படுத்துவதற்கு தர்க்கரீதியான விளக்கங்களை அளிக்க முயற்சிப்பார்கள். ஒரு கும்ப ராசிக்காரர் தவறு செய்தால் அதை ஒப்புக் கொள்வதற்கு பதிலாக தங்கள் செயல்களை ஒரு புதுமையான முயற்சி என்று விளக்கி அதிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள்.
இந்த ராசிக்காரர்கள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள தயங்குவதற்கு அவர்களின் ஆளுமைப் பண்புகளே காரணம். இருப்பினும் ஒவ்வொரு நபரின் ஆளுமை, அவர்களின் வளர்ப்பு, வளர்ந்த சூழல் மற்றும் அனுபவங்களைப் பொறுத்து மாறுபடலாம். தவறுகளை ஒப்புக்கொள்வது ஒரு தனிப்பட்ட வளர்ச்சிக்கு முக்கியமானது. இந்த ராசிக்காரர்களும் சில சமயங்களில் தங்கள் தவறுகளை உணர்ந்து அதை ஏற்றுக் கொள்ள கற்றுக் கொள்ளலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிடம், பஞ்சாங்கம், மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. தகவல்களை வழங்குவதன் மட்டுமே எங்கள் நோக்கமாகும். இந்த தகவல்களை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களின் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் மாறுபடும் என்பதால் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள அனுபவமிக்க ஜோதிடரை அணுகுவது நல்லது)