Astrology: நேருக்கு நேர் சந்திக்கும் எதிர் கிரகங்கள்.! சனி செவ்வாய் சேர்க்கையால் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் 3 ராசிகள்.!

Published : Oct 03, 2025, 12:58 PM IST

Panchama drishti yog: அக்டோபர் மாத இறுதியில் எதிர் கிரகங்களாக கருதப்படும் சனி மற்றும் செவ்வாய் பஞ்சம யோகத்தை உருவாக்க இருக்கின்றன. இதன் விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
சனி செவ்வாய் சேர்க்கை 2025

வேத ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுக்கும் சிறப்பு முக்கியத்துவம் மற்றும் செல்வாக்கு இருக்கிறது. ஒவ்வொரு கிரகத்திற்கும் அதன் சொந்த ராசிகளும் உள்ளன. இந்த கிரகங்கள் தங்கள் ராசிகளுக்கு சிறப்பு நன்மைகளையும் அளிக்கின்றன. கிரகங்களுக்கு இடையே நட்பு மற்றும் பகைமைகளும் உள்ளன. சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரு கிரகங்களும் எதிரிகளாக கருதப்படுகின்றன. இந்த கிரகங்கள் இரண்டும் சந்திக்கும் பொழுது நன்மைகளையும், தீமைகளையும் கொண்டு வரக்கூடும்.

25
பஞ்சம திருஷ்டி யோகம்

2025 ஆம் ஆண்டு தீபாவளிக்குப் பிறகு, அக்டோபர் 30 ஆம் தேதி அதிகாலை 12:32 மணிக்கு செவ்வாய் மற்றும் சனி பகவான் 120° கோணத்தில் அமைகின்றன. இதன் காரணமாக ‘பஞ்சம திருஷ்டி யோகம்’ உருவாகிறது. இது ‘பஞ்சம யோகம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மங்களகரமான யோகமானது மூன்று ராசிகளுக்கு சிறப்பு நன்மைகளை வழங்க உள்ளது. 

செவ்வாய் கிரகம் ஆற்றல், வீரம், தைரியம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். சனி பகவான் கர்ம வினைகளின் அடிப்படையில் நீதியை வழங்குகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையானது சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரவுள்ளது.

35
ரிஷபம்

செவ்வாய் மற்றும் சனிபகவான் உருவாக்கும் பஞ்சம திருஷ்டி யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. இதுவரை குழப்பமாக இருந்து வந்த நீங்கள் தெளிவான மற்றும் திருப்திகரமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் எதிரிகளால் நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான பல நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். 

இதுவரை வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வரும் காலங்களில் பெரிய உடல்நிலை பிரச்சினைகளும் ஏற்படாது. குடும்பம் மற்றும் உறவுகளில் அன்பும் நல்லிணக்கமும் நிலவும். உடன் பிறந்தவர்களிடையே தவறான புரிதல்கள் அல்லது சண்டைகள் இருந்தால் அவை பேசி தீர்க்கப்படும். குடும்பத்தில் ஒற்றுமை உருவாகும்.

45
கன்னி

அக்டோபர் மாத இறுதியில் உருவாகும் பஞ்சம யோகமானது கன்னி ராசிக்காரர்களுக்கு புதிய உற்சாகத்தையும், ஆற்றலையும் தரும். எந்த சவால்களாக இருந்தாலும் அவற்றை தைரியமாக எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர்கள், புதிய வேலைவாய்ப்புகள் அல்லது பதவி உயர்வைப் பெறுவீர்கள். இதன் காரணமாக உங்கள் பொருளாதார நிலை கணிசமாக மேம்படும். 

சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் பணம் ஈட்டுவதற்கு புதிய வழிகள் திறக்கப்படும். வாடகை வீட்டில் வசித்து வருபவர்களுக்கு சொந்தமாக வீடு வாங்கும் யோகம் கை கூடும். நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்த கனவு அடுத்த சில மாதங்களில் நிறைவேறும்.

55
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு பஞ்சம யோகம் சிறப்பான நன்மைகளை வழங்கும். சமீபத்தில் வேலை மாறியவர்களுக்கு மிகவும் சாதகமான காலம் ஏற்படும். புதிய பணியிடத்தில் பதவி உயர்வுகள், அதிகரித்த பொறுப்புகள் காரணமாக உங்கள் வருமானம் இரட்டிப்பாக அதிகரிக்கும். வணிகம் செய்து வருபவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். புதிய திட்டங்களில் பணியாற்றுவீர்கள். மாணவர்கள் இந்த காலகட்டத்தில் புதிய உயரங்களை தொடுவீர்கள். அரசு வேலையை பெறுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. 

குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். திருமணமானவர்களுக்கு தங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் உடன் பிறந்தவர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். இதன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சியான மற்றும் திருப்தியான சூழ்நிலை நிலவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories