Sani Peyarchi Palan 2024: தீபாவளிக்குப் பின் அரசு வேலையில் அமரப்போகும் ராசிக்காரர்கள் யார்?

First Published | Jul 17, 2024, 11:06 AM IST

கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் சனிபகவானால் தீபாவளிக்குப் பின்னர் சிலருக்க புது வேலை கிடைக்கும். சில ராசிக்காரர்களின்  வேலையில் மாற்றம் ஏற்படும். சனி பகவான் தொழில் காரகன். உழைப்பின் அதிபதி. சனிபகவானின் அருள் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் நீங்கும். யாருக்கெல்லாம் தீபாவளிக்குப் பிறகு அரசு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்று பார்க்கலாம்.

மேஷம்

லாப சனி வேலையில் புரமோசனை தரப்போகிறார். வெளிநாடு வேலை, கல்வி வாய்ப்பினை தரப்போகிறார் சனி பகவான்.  தீபாவளிக்குப் பிறகு புரமோசன் கிடைத்து ஆபிசர் ஆகும் யோகம் தேடி வரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் நிறைய லாபத்தை தரப்போகிறார். ஏழைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுங்கள்.

ரிஷபம்

வக்ர நிலை முடிந்து சனி பகவான் நேராக பயணம் செய்யும் காலத்தில் உங்களுக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். ரிஷப ராசிக்கார பெண்களுக்கு அரசு வேலை கிடைக்கும். மகிழ்ச்சியும் மன நிறைவும் அதிகரிக்கும். சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சனிபகவானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

Tap to resize

கன்னி

சனிபகவானின் பயணத்தால் கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உங்களின் வருமானம் இரட்டிப்பாகும். கடன்களை அடைபடுவதற்கான நேரம் வந்து விட்டது.  அரசு வேலைக்காக போட்டி தேர்வு எழுதியுள்ளவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். சொந்த தொழில் செய்பவர்கள் தொழிலை விரிவுபடுத்தலாம்.

துலாம்

துலாம் ராசிபகவான் உச்சமடைபவர். உங்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் இருந்த மன உளைச்சல் நீங்கப்போகிறது. நல்ல வேலை கிடைக்கப்போகிறது. தீபாவளிக்குப் பிறகு கை நிறைய சம்பளத்தில் நல்ல புரமோசன் கிடைக்கப்போகிறது. சனிக்கிழமை அனுமனை வழிபட நினைத்த காரியங்கள் ஜெயிக்கும்.

மகரம்

சனி பகவான் குடும்ப சனியாக இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்தி தேடி வரப்போகிறது.  தீபாவளிக்குப் பிறகு வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றம் தேடி வரப்போகிறது.

மீனம்

ஏழரை சனி காலமாக இருந்தாலும் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு புது வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் அதிகரிக்கும். சனிக்கிழமை நல்லெண்ணெய் தேய்த்து குளித்து சனி பகவானுக்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

Latest Videos

click me!