ராகு கேது பெயர்ச்சி பலன்: யாருடைய வாழ்வில் அதிரடி மாற்றம்; கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரும்?

First Published | Jul 17, 2024, 10:46 AM IST

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும் பலம் பெற்றவர்கள். மீன ராசியில் ராகுவும் கன்னி ராசியில் கேதுவும் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் 2025ஆம் ஆண்டு மே மாதம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் குபேர யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

ராகு கேது ஆளுமை:

ராகு ஆசைக்கு  காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகு கேதுவிற்கு ஒரு நாளில் ஒன்றரை மணி நேரம் என மூன்று மணிநேரத்தை ராகு கேதுக்கள் ஆள்கின்றன.

யோகம் தரும் ராகு கேது:

நிழல் கிரகங்களான ராகு கேது பொதுவாகவே ஒருவரின் ஜாதகத்தில்  மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் அந்த ஜாதகருக்கு வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.  ஜனன ஜாதகத்தில் ராகு கேது  3, 6,  11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது.

Tap to resize

மேஷம்

உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான மறைவு ஸ்தானத்தில் ராகுவும் ஆறாம் வீடான ருண ரோக ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்வது சிறப்பு.  "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பதன் அடிப்படையில் 2025ஆம் ஆண்டு வரை மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு திருமணம் வீடு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட சுபகாரியங்கள் நடக்கும். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேதுவின் சஞ்சாரத்தினால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதிப்பீர்கள். கோடீஸ்வர யோகமும் குபேர யோகமும் தேடி வரப்போகிறது.
 

ரிஷபம்

லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகு எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் தரப்போகிறார்கள். உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும்.  5ஆம் வீட்டில் கேது பயணம் செய்வது யோகம் தான்.  கேதுவின் மீது குருவின் பார்வையும் விழுகிறது. கடன் சுமை குறையும் வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.

துலாம்

உங்களுடைய ராசிக்கு 6ஆம் வீடான எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு 2025ஆம் ஆண்டு மே மாதம் வரைக்கும் பயணம் செய்வதால் கடன் அடைப்படும் தீராத நோய் தீரும். பிரச்சினை முடிவுக்கு வரும். போட்டி பொறாமைகள் நீங்கும். தொழில் முயற்சிகள் கை கூடும். படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் கடன்களும் அடைபடும். நிம்மதியும் சந்தோஷமும் தேடி வரப்போகிறது.

மகரம்

ராகு மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் தீரும். பாக்ய ஸ்தானத்தில் மோட்சத்தை கொடுக்க கூடிய கேது பயணம் செய்வதால் இதுவரை தடைபட்டு நடக்காத காரியங்கள் தடைகள் நீங்கி சுபமாக நடைபெறும்.

Latest Videos

click me!