
வேத ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் நாம் செய்யும் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் நீதிமான் ஆவார். இவர் ஒரு ராசியை கடப்பதற்கு சுமார் இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். எனவே ஒரு சுழற்சியை முடிக்க, அவருக்கு 30 ஆண்டுகள் ஆகிறது. அந்த வகையில் தற்போது அவர் ஜூன் 3, 2027 மேஷ மேஷ ராசியில் பெயர்ச்சி அடைய இருக்கிறார். சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைவது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதையும் படியுங்கள் - குரு சந்திரன் கூட்டணியால் உபயசாரி யோகம் - ஜூலை 26 முதல் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் பண மழையும் கொட்டப்போகுது.!
மேஷ ராசி என்பது சனி பகவானுக்கு நீச வீடாகும். நீசம் என்றால் ஒரு கிரகம் தனது முழு பலத்தையும் இழக்கும் இடமாகும். சனி பகவான் மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆவதால் உலக அளவிலும், தனிநபர் வாழ்க்கையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்படும். மேஷத்தில் சனி நீசம் அடைந்தாலும் செவ்வாயின் ஆதிக்கம் மற்றும் குருவின் பார்வையைப் பொறுத்து நீசபங்க ராஜயோகங்கள் ஏற்பட்டு பலருக்கு திடீர் அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். நியாயத்தின் கடவுளான சனி பகவான் உழைப்புக்கும், நேர்மைக்கும் ஏற்ற பலன்களை கண்டிப்பாக தருவார். கடந்த காலங்களில் செய்த நல்ல மற்றும் கெட்ட வினைகளுக்கான பலன்களை அறுவடை செய்யும் காலமாக இருக்கும்.
இதையும் படியுங்கள் - அடுத்த 7 நாள், இந்த 5 ராசிக்கு ஜாக்பாட்! பணமழையும், பதவி உயர்வும் நிச்சயம்.!
சனி பகவான் மேஷ ராசியில் பெயர்ச்சி அடைவது மிதுன ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்க இருக்கிறது. புதிய வருமானத்திற்கான வழிகள் பிறக்கும். எதிர்பாராத பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் காலமாக இருக்கும். லாப வீட்டில் அமரும் சனி பகவானின் நிலை காரணமாக பணவரவு அபரிமிதமாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும். சுப விரயங்கள், வீடு வாங்குதல், வாகனம் வாங்குதல் ஆகியவை நடக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். தொழிலாளர்கள் புதிய ஒப்பந்தங்களையும் பெறுவீர்கள்.
இதையும் படியுங்கள் - உங்க கல்யாணம் சீக்கிரம் நடக்குமா? லேட்டா நடக்குமா? பிறந்த தேதியே வச்சே கண்டுபிடிக்கலாம் வாங்க.!
சனி பெயர்ச்சி காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூன் 3, 2027 தொடங்கி நல்ல காலம் பிறக்க இருக்கிறது. தந்தை வழி உறவில் சமூக நிலை மேம்படும். தந்தை வழியில் இருந்து பூர்வீக சொத்துக்கள் கிடைக்கலாம். ஆன்மீகப் பயணங்கள் உண்டாகும். அதிர்ஷ்டம் கதவைத் தட்டும். முடங்கி கடந்த பணிகள் மீண்டும் வேகம் எடுக்கும். இதுவரை உங்கள் வாழ்க்கையில் இருந்து வந்த தடைகள் நீங்கும். நிதி நிலைமை கணிசமாக உயரும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். குடும்பத்தில் அடுத்தடுத்த சுப காரியங்கள் நடைபெறும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபம் பெறுவீர்கள்.
இதையும் படியுங்கள் - இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் பொறுமையில் பூமாதேவிகளாக இருப்பார்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
சனி பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை வாரி வழங்க இருக்கிறது. சனி பெயர்ச்சிக்குப் பின்னர் தொழில் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். விரும்பிய வேலைகளை கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு கிடைக்கலாம். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். பெரிய முதலீடுகளை தொடங்குவீர்கள். போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் வெற்றிகளைப் பெறுவார்கள். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வாகனம் மற்றும் சொத்து சேர்க்கை உண்டாகும். கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து மன நிம்மதி பெறுவீர்கள்.
இதையும் படியுங்கள் - வடக்கு நோக்கி நகரும் செவ்வாய் பகவான்.! ஜூலை 25 முதல் இந்த 5 ராசிகள் பட்ட கஷ்டம் எல்லாம் முடிவுக்கு வருது.!
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிவுக்கு வருவதால் வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றம் இருக்கும். நீங்கள் மனதில் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். இதுவரை அனுபவித்து வந்த கஷ்டங்களில் இருந்து பெரும் நிவாரணம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சகோதரர் வழியில் ஆதரவு கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன்களைப் பெறுவீர்கள். நினைத்த காரியங்கள் கைகூடும். புதிய தொழில் தொடங்குவீர்கள். வெளிநாடு செல்லும் கனவு நனவாகும். பழைய வீட்டில் இருந்து மாறி புதிய வீட்டிற்கு செல்வீர்கள். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. போட்டிகளை சமாளித்து வெற்றிகளைப் பெறுவீர்கள்.
இதையும் படியுங்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும், சுய கட்டுப்பாடோட இருப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.