Ruchak Rajyog 2026: ஒரு வாரத்தில் 4 ராசிகளுக்கு ராஜயோகம்.! ருச்சக மகா புருஷ யோகத்தால் நடக்கப்போகும் அதிசயம்.!

Published : Jan 09, 2026, 10:46 AM IST

Ruchak Rajyog 2026: செவ்வாய் கிரகம் மகர ராசியில் உச்சம் பெறும் காலத்தில் உருவாகும் சிறப்பு யோகமே ருச்சக மகா புருஷ யோகம் எனப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் நான்கு ராசிகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொண்டுவரும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 

PREV
15
Ruchak Rajyog 2026

செவ்வாய் உச்சம் அல்லது ஆட்சி பெறும் போது ருச்சக ராஜயோகம் உருவாகிறது. தற்போது தனுசு ராசியில் சஞ்சரித்து வரும் செவ்வாய் பகவான் ஜனவரி 16, 2026 மகரத்திற்குள் நுழைந்து ருச்சக மகா புருஷ ராஜயோகத்தை உருவாக்குகிறார்.

இந்த ராஜயோகம் சில ராசிகளுக்கு பொற்காலத்தை வழங்கவுள்ளது. இது தலைமைப் பண்பு, தைரியத்தை அதிகரிக்கும். இந்த யோகத்தின் விளைவாக மேஷம், கடகம், துலாம், மகர ராசிகளுக்கு பணம், பதவி, மரியாதை கிடைக்கும். 

25
மேஷம்

மேஷ ராசிக்கு செவ்வாய் பத்தாம் வீட்டில் வலுவாக இருப்பதால், உத்தியோகத்தில் அதிகாரம் பெருகும். புதிய பொறுப்புகள், பதவி உயர்வுகள் கிடைக்கும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் தென்படும்.

35
கடகம்

இந்த ராசிக்கு செவ்வாய் ஏழாம் வீட்டில் உச்சம் பெறுவதால், கூட்டாண்மைத் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் கைகூடும். வேலையில் பதவி உயர்வு சாத்தியமாகும். வருமானம் சீராக உயரும்.

45
துலாம்

துலாம் ராசிக்கு வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. சொத்துத் தகராறுகள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் அந்தஸ்து உயரும். பொருளாதார ரீதியாக வலுப்பெறுவார்கள்.

55
மகரம்

மகர ராசிக்கு இந்த யோகம் மிகவும் சக்தி வாய்ந்தது. சமூகத்தில் பெயரும் புகழும் உயரும். அரசு அங்கீகாரம் கிடைக்கும். சொத்து மதிப்பு உயரும், பூர்வீக சொத்து கிடைக்கும். முக்கியப் பிரமுகர்களுடன் பழக்கம் விரிவடையும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories