
திருமண வாழ்க்கையில் நுழையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் கணவர் அன்பானவராகவும், தங்களுக்கு பக்கபலமாக இருப்பவராகவும் அமைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவருடைய பிறந்த ராசியை வைத்து அவர்களின் குணநலன்களையும், அவர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என்பதையும் ஓரளவிற்கு அறிய முடியும்.
பொதுவாக அனைத்து ஆண்களுமே ஏதோ ஒரு வகையில் தனித்தன்மை வாய்ந்தவர்கள் தான் என்றாலும், சில குறிப்பிட்ட ராசிகளில் பிறந்த ஆண்கள் தங்களின் மனைவிக்கு மிகச்சிறந்த, நம்பிக்கையான கணவராக விளங்குவதாக ஜோதிடம் கூறுகிறது. விசுவாசம், அக்கறை, பாதுகாப்பு உணர்வு போன்ற நற்பண்புகள் அதிகம் நிறைந்த அந்த ராசிக்காரர்கள் யார் யார் என்பதை இங்கே பார்ப்போம்.
சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த ரிஷப ராசி ஆண்கள், காதலிலும் சரி, திருமண வாழ்க்கையிலும் சரி, மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படக்கூடியவர்கள். இவர்களிடம் நேர்மையும் விசுவாசமும் இயல்பாகவே குடிசொண்டிருக்கும். தற்காலிகமான உறவுகளைத் தவிர்த்து, நீண்ட கால பந்தத்திற்கும் குடும்ப அமைப்பிற்கும் இவர்கள் அதிக முக்கியத்துவம் தருவார்கள்.
உங்கள் வாழ்க்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை, ஆடம்பரமான வசதிகள் மற்றும் குறையாத காதல் ஆகியவற்றைத் தரும் ஒரு கணவர் வேண்டும் என நினைத்தால், உங்களுக்கு ரிஷப ராசி ஆண்கள் மிகச்சிறந்த தேர்வு.
இதையும் படிங்க: மகாலட்சுமி ராஜயோகம்! இந்த 2 ராசிக்காரர்களுக்கு பணம், அதிர்ஷ்டம் குவியும்: https://tamil.asianetnews.com/gallery/astrology/mahalakshmi-raja-yoga-these-2-zodiac-signs-may-attract-wealth-and-success-ai7gr89
சந்திரனை அதிபதியாக கொண்ட கடக ராசி ஆண்கள், இயல்பிலேயே மற்றவர்கள் மீது அதிக பாசமும், அக்கறையும் காட்டுபவர்கள். தன் துணையைப் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. எதற்கடுத்தாலும் குடும்பத்தின் நலனுக்கே இவர்களது முதல் முன்னுரிமை இருக்கும்.
உணர்வுப்பூர்வமாக உங்களை புரிந்துகொள்ளும் குணம் கொண்டவர்கள். குடும்பப் பொறுப்புகளை தட்டிக்கழிக்காமல் இன்முகத்தோடு ஏற்பார்கள். அமைதியான, அன்பான இல்லற வாழ்க்கையை அமைத்துத் தருவதில் வல்லவர்கள்.
கன்னி ராசி ஆண்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தையும் மிகவும் நேர்த்தியாகவும், திட்டமிட்டும் செய்ய விரும்புவார்கள். அறிவாற்றல், நகைச்சுவை உணர்வு மற்றும் பிறர் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் குணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும். தன் மனைவியின் சிரமங்களைக் குறைத்து, அவர்களின் வாழ்க்கையை எப்படி எளிதாக்கலாம் என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள்.
ஒழுக்கமான, திட்டமிடப்பட்ட வாழ்க்கை மற்றும் ஒவ்வொரு சின்னஞ்சிறு விஷயத்திலும் தன் மீது உண்மையான அக்கறை காட்டும் ஒரு துணை வேண்டும் என விரும்பும் பெண்களுக்கு கன்னி ராசி ஆண்கள் பொருத்தமானவர்கள்.
இதையும் படிங்க: இந்த தேதிகள்ல பொறந்த பொண்ணுங்க பெஸ்ட் பொண்டாட்டியாஇருப்பாங்களாம்!https://tamil.asianetnews.com/gallery/astrology/numerology-reveals-women-born-on-these-dates-are-best-life-partners-811ne19
மகர ராசி ஆண்கள் கடுமையான உழைப்பாளிகளாகவும், உயர்ந்த லட்சியங்களைக் கொண்டவர்களாகவும் திகழ்வார்கள். ஒருமுறை ஒருவருக்கு வாக்குக் கொடுத்துவிட்டால், அதை எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள். குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் தன் தோள்களில் சுமந்து, மனைவியையும் குழந்தைகளையும் அரணாக காப்பார்கள்.
கொடுத்த வாக்கை மீறாத நம்பகத்தன்மை கொண்டவர்கள். குடும்பத்தின் எதிர்காலப் பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். தீவிரமான, நிலையான மற்றும் முதிர்ச்சியானதொரு உறவை விரும்பும் பெண்களுக்கு இவர்கள் சிறந்த ஜோடி.
முக்கிய குறிப்பு: ஜோதிடத்தின்படி இந்த ராசிகளில் நற்பண்புகள் அதிகமாகக் காணப்பட்டாலும், ஒவ்வொரு மனிதரின் வளர்ப்பு முறையும், சூழ்நிலையும் அவர்களின் குணாதிசயங்களைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.