Astrology: ஜோதிர சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்கள் உயிரே போனாலும் நீங்கள் சொன்ன ரகசியத்தை வெளியே சொல்ல மாட்டார்கள். அப்படிப்பட்ட டாப் 3 ராசிக்காரர்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
உயிரே போனாலும் ரகசியம் காக்கும் டாப் 3 ராசிக்காரர்கள்
இன்றைய நவீன காலகட்டத்தில் யாரையும் நம்பி எந்த ஒரு முக்கியமான விஷயத்தையும் சொல்ல முடியவிலை. நமக்கு நெருக்கமான ஒருவரிடம் கூட நம்முடைய மனதிற்கு நெருக்கமான ரகசியத்தைப் பகிர்வது என்பது மிக ஆபத்தான விஷயமாக மாறிவிட்டது. "இதை யாரிடமும் சொல்லாதே, உன்னை நம்பி மட்டும்தான் சொல்கிறேன்" என்று நாம் உருகிச் சொல்லும் ஒரு விஷயம், அடுத்த சில நிமிடங்களில் வாட்ஸ்அப், சோசியல் மீடியா என காட்டுத்தீ போல பரவிவிடுகிறது.
உறவுகளுக்குள் விரிசல் விழுவதற்கும், நம்பிக்கைத் துரோகங்கள் நடப்பதற்கும் இந்த ரகசியங்களை அடுத்தவரிடம் பொதுப்படையாகப் பேசுவதே முக்கியக் காரணமாக அமைகிறது. ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்களிடம் நீங்கள் எந்த ஒரு பரம ரகசியத்தைக் கூட எவ்வித பயமும் இன்றி தைரியமாக ஒப்படைக்கலாம். அவர்கள் உயிரே போனாலும் அடுத்தவரிடம் அதைச் சொல்ல மாட்டார்கள். அந்த டாப் 3 ராசிகள் யார் என்று விரிவாகப் பார்ப்போம்.
24
நம்பகத்தன்மையின் மறுபெயர் - மகர ராசிக்காரர்கள்
சனி பகவானை அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்கள் மிகவும் முதிர்ச்சியான, ஒழுக்கமான மற்றும் பொறுப்புணர்வு மிக்கவர்கள். தேவையில்லாத வதந்திகளைப் பரப்புவதோ அல்லது அடுத்தவர் வீட்டு விஷயங்களில் தேவையின்றி மூக்கை நுழைப்பதோ இவர்களுக்குச் சற்றும் பிடிக்காத காரியம்.
ஒருவர் தங்களை நம்பி ஒரு தனிப்பட்ட ரகசியத்தைக் கூறும்போது, அதைத் தங்களுக்குக் கிடைத்த ஒரு கௌரவமாகப் பார்ப்பார்கள். காலப்போக்கில் உங்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டாலோ அல்லது உங்களுக்கு எதிராகச் சூழ்நிலை மாறினாலோ கூட, உங்கள் பலவீனத்தையோ, ரகசியத்தையோ இவர்கள் ஒருபோதும் தங்களுக்குச் சாதகமாக ஆயுதமாகப் பயன்படுத்த மாட்டார்கள். 'உயிரே போனாலும் உன்னை பற்றிய ரகசியத்தை வெளியே சொல்ல மாட்டான் இந்த கோட்டைசாமி' என்ற நகைச்சுவை சொல்லுக்கு பொருத்தமானவர்கள்.
ஜோதிட உலகத்தில் விருச்சிக ராசிக்காரர்களை "மர்மங்களின் குறியீடு" என்றுதான் அழைப்பார்கள். இவர்களது மனதை ஒரு வலுவான இரும்பு லாக்கர் என்றே கூறலாம். தங்களுக்குள் இருக்கும் சொந்த ரகசியங்களை இவர்களே எளிதில் வெளியில் சொல்ல மாட்டார்கள். அப்படியிருக்க, அடுத்தவர்கள் நம்பிச் சொன்ன ரகசியங்களை இவர்களின் வாழ்நாளுக்கும் வெளியில் சொல்லவே மாட்டார்கள்.
இவர்களிடம் நீங்கள் ஒரு ரகசியத்தைக் கூறினால், அது அவர்களின் இதயத்தோடு புதைந்து போகுமே தவிர, ஒருபோதும் அடுத்தவர் காதுகளுக்குச் செல்லாது. விசுவாசம் என்பது இவர்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று என்பதால், இவர்களை நீங்கள் 100% கண்களை மூடிக்கொண்டு நம்பலாம். 'அடித்துக் கூட கேட்பாங்க அப்பவும் சொல்லாத' என்ற வார்த்தைகளுக்கு இவர்கள் மிகவும் பொருத்தமானவர்கள்.
சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் இயற்கையிலேயே பாசக்காரர்கள் மற்றும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு அதிக மதிப்பு கொடுப்பவர்கள். ஒருவருடைய ரகசியம் வெளியில் தெரிந்தால், சம்பந்தப்பட்ட நபர் சமூகத்தில் எவ்வளவு மன உளைச்சலுக்கும், அவமானத்திற்கும் ஆளாவார் என்பதை இவர்கள் தங்களின் சொந்த வலியாக உணர்வார்கள்.
தங்களை நம்பியவர்களை எந்தச் சூழ்நிலையிலும், எவ்வளவு பெரிய இக்கட்டான கட்டத்திலும் காட்டிக் கொடுக்கக் கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு ரகசியத்தைச் சொன்னால், அதைத் தன் சொந்தக் குடும்ப விஷயம் போலப் பாதுகாப்பார்கள்.