நம் ஒவ்வொரிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டிய குணம் எதுவென்றால் பொறுப்புணர்வு தான். ஆனால் இந்த குணம் எல்லோரிடமும் இருப்பதில்லை. இந்த குணம் இல்லை என்றால், எந்தவொரு விஷயத்திலும் வெற்றியை காண முடியாது. ஆனால், ஜோதிடத்தின்படி சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் ரொம்பவே பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்களாம். அவர்கள் எல்லா துறைகளிலும் சிறந்து வழங்குவார்கள். அது எந்தெந்த மாதம் என்று இந்த பதிவில் காணலாம்.
25
ஜனவரி :
ஜோதிடத்தின் படி, ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் பொறுப்புணர்வில் முதலிடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் ஒழுக்க மற்றும் தீவிரமான அர்ப்பணிப்பு கொண்டவர்களாக இருப்பார்களாம். இயற்கையாகவே இவர்களிடம் தலைமைப்பண்பு இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் இவர்கள் ரொம்பவே பொறுப்புணர்வுடன் இருப்பார்கள். பிறருக்கு எந்த சூழ்நிலையிலும் உதவி செய்ய தயங்க மாட்டார்கள்.
35
ஆகஸ்ட் :
ஜோதிடத்தின்படி, ஆகஸ்ட் மாசம் பிறந்தவர்கள் தீவிர பொறுப்புணர்வுக்கு பெயர் பெற்றவர்களாம். இவர்கள் பேச்சில் சிறந்தவர்கள், பிரச்சினைகளை தீர்ப்பதில் வல்லவர்கள். குடும்ப வாழ்க்கை மற்றும் தொழிலில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள். இவர்களிடம் இருக்கும் இந்த குணம் இவர்களை நம்பகமானவராக மாற்றுகின்றது.
ஜோதிடத்தின்படி, ஏப்ரல் மாதம் பிறந்தவர்கள் அசைக்க முடியாத பொறுப்புணர்வை கொண்டவர்கள். எந்த சவால்களையும் சுலபமாக கையாளுவார்கள். பொறுப்புகளில் உறுதியாக இருப்பார்கள். இதனாலேயே இவர்கள் அனைவராலும் மதிக்கப்படுவர். தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் ரொம்பவே அர்ப்பணிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். கொடுக்கும் வேலையை துல்லியமாக செய்து முடிப்பர்.
55
நவம்பர் :
ஜோதிடத்தின் படி, நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் அதிக பொறுப்புணர்விற்கு பெயர் பெற்றவர். குறிப்பாக குடும்ப விஷயத்தில் கூடுதல் பொறுப்பாக செயல்படுவர். குடும்பத்திற்காக தியாகம் செய்ய கூட தயங்க மாட்டார்கள். இவர்களின் இந்த பொறுப்புணர்வு காரணமாக அனைவராலும் பாராட்டப்படுவர்.