துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் தொழில் ரீதியாக சாதகமான நாளாகும். நீங்கள் தொழில் ரீதியாக மேற்கொள்ளும் அனைத்து பணிகளும் வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படும். சில நேரங்களில் தன்னம்பிக்கை குறைவது அல்லது முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படலாம். எனவே நிதானத்துடன் இருங்கள்.
நிதி நிலைமை:
இன்று பணவரவு சீராக இருக்கும். நிதி ரீதியாக சாதகமான நாளாக இருக்கும். சில எதிர்பாராத செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அது பெரிய சிக்கலை ஏற்படுத்தாது. பங்குச்சந்தை தொடர்பான முயற்சிகள் ஆதாயங்களை கொண்டு வரலாம். இருப்பினும் நிதானமாக செயல்பட வேண்டிய அவசியம். முக்கிய நிதி முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் நிதி ஆலோசர்களை அணுகுவது நன்மை தரும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்றைய தினம் உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகளுக்கிடையே பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். உறவினர்களிடையே மனக்கசப்புகள் ஏற்படலாம். இருப்பினும் உங்களுக்கான மரியாதையை காப்பாற்றிக் கொள்வது நல்லது. காதல் வாழ்க்கையில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஆழமாக சிந்தித்து முடிவெடுங்கள் அவசரப்பட்டு எதிர்வினையாற்றுவதை தவிர்த்து விடுங்கள்.
பரிகாரங்கள்:
இன்று அன்னை துர்கா தேவியை வணங்குவது நன்மை தரும். மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர்கள் சமர்ப்பித்து வழிபடுங்கள். முருகப்பெருமானை வழங்குவது நேர்மறை ஆற்றல்களை அதிகரிக்கும். இயலாதவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.