Nov 12 Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று வாயில் தான் கண்டம்.! வாயை மட்டும் திறந்துடாதீங்க.!

Published : Nov 11, 2025, 05:09 PM IST

Nov 12 Dhanusu Rasi Palan : நவம்பர் 12, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
நவம்பர் 12, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் பேச்சிலும், செயலிலும் நிதானமும், பொறுமையும் தேவை. முக்கிய முடிவுகளை எடுப்பதில் குழப்பம் அல்லது தாமதம் ஏற்படலாம். எனவே முக்கிய முடிவுகளை எடுப்பதை இன்று தவிர்த்து விடுங்கள். துணிச்சலுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய நாளாகும். வீண் அலைச்சல், தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுங்கள்.

நிதி நிலைமை:

இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேர்வதில் தாமதம் ஏற்படலாம். பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கணக்கு வழக்குகளை கவனமாக சரிபார்க்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை் கடன் கொடுப்பது அல்லது வாங்குவதை இன்று தவிர்த்து விடுங்கள். பணப்புழக்கம் சீராக இருப்பதற்கு கூடுதல் முயற்சிகள் தேவைப்படலாம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறவுகளில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் மனக்கசப்புகளை தவிர்க்கலாம். பிள்ளைகளின் ஆரோக்கியம் அல்லது கல்வி விஷயங்களில் அதிக கவனம் தேவைப்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் பொழுது கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. மற்றவர்களை காயப்படுத்தாமல் இருப்பது நல்லது.

பரிகாரங்கள்:

இன்றைய தினம் மகாவிஷ்ணுவை வழிபடுவது மன அமைதியையும், ஆற்றலையும் அளிக்கும். ஓம் நமச்சிவாய மந்திரத்தை 11 முறை உச்சரிப்பது நன்மைகளைத் தரும். அன்னதானம் அல்லது பழங்கள் தானம் செய்வது மனநிறைவை அளிக்கும். வெள்ளை நிற ஆடைகள் அல்லது மஞ்சள் நிறப் பொருட்களை பயன்படுத்துவது இன்றைய தினம் அனுகூலமாக இருக்கும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories