கும்ப ராசியின் அதிபதியான சனி பகவானுக்கும், ராகு பகவானுக்கும் இடையே நட்பு உணர்வு நிலவுகிறது. ராகு தனது சொந்த நட்சத்திரமான சதயத்திற்கு வருவது கும்ப ராசிக்கும் பலன்களை வழங்க உள்ளது. கும்ப ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்திற்கு பின்னர் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை காண்பீர்கள். நிதி ரீதியாக நல்ல பலன்களை அனுபவிக்கலாம்.
புதிய மூலங்களில் இருந்து பணம் கிடைக்கும். பழைய கடன் பிரச்சனைகள் தீர்க்கப்படும். காதல் தொடர்பான சிக்கல்களும் தீர்ந்து, மகிழ்ச்சி ஏற்படும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சமூகத்தில் உங்களுக்கென அடையாளம் உருவாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)