Astrology: கும்ப ராசியில் வலிமை பெறும் ராகு.. இன்று முதல் இந்த 3 ராசிகளுக்கு பொன், பொருளை அள்ளித் தரப் போகிறார்.!

Published : Sep 10, 2025, 12:21 PM IST

இதுவரை பலவீனமாக இருந்து வந்த ராகு பகவான் தற்போது வலிமை அடைய இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிகள் இரு மடங்கு நன்மைகளைப் பெற உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
வலிமையடையும் ராகு பகவான்

வேத ஜோதிடத்தின் படி ராகு பகவான் ஒரு நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் பயணிப்பார். மே 18 ஆம் தேதி முதல் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். கும்ப ராசி சனிபகவான் ஆட்சி செய்யும் ராசியாகும். சனி மற்றும் ராகு இருவரும் நட்பு கிரகங்கள் என்பதால் ராகுவின் கும்ப ராசி பெயர்ச்சி சில ராசிகளுக்கு நல்ல பலன்களை தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராகு இதுவரை பலவீனமான நிலையில் இருந்தார். ஆனால் செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் ராகு வலிமை அடைவதால், சில ராசிக்காரர்கள் இருமடங்கு நன்மைகளை பெற உள்ளனர்.

25
கும்பம்

கும்ப ராசியின் லக்னத்தில் ராகு இருக்கிறார். இதன் காரணமாக கும்பராசிக்காரர்கள் வாழ்க்கையில் புதிய உச்சங்களை தொட இருக்கின்றனர். இவர் உங்கள் மனம், மூளை மற்றும் முடிவெடுக்கும் திறனை பாதிக்கலாம். இருப்பினும் நீங்கள் லட்சியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் இருந்தால் பெரிய இலக்குகளை அடையலாம். பல துறைகளிலும் நீங்கள் மகத்தான வெற்றியை அடைய முடியும். ராகு லக்னத்தில் இருக்கும் பொழுது 5, 7, 9 ஆவது வீடுகளைப் பார்வையிடுகிறார். ஐந்தாவது வீடு கல்வி மற்றும் முதலீட்டின் காரணியாக கருதப்படுகிறது. இதன் காரணமாக வெளிநாட்டில் கல்வி கற்கும் வாய்ப்பு, உயர்கல்வி படிக்கும் வாய்ப்புகள் ஏற்படலாம். ஏழாவது வீடு வணிகம், திருமணம், தொழில் ஆகியவற்றை குறிக்கிறது. எனவே இந்த சமயத்தில் திருமணம் மற்றும் தொழிலில் வெற்றி ஆகியவற்றை பெற முடியும்.

35
மகரம்

மகர ராசியின் செல்வ ஸ்தானத்தில் ராகு இருக்கிறார். 6, 8, 10 ஆகிய வீடுகளை அவர் பார்வையிடுகிறார். இந்த சூழ்நிலையில் மகர ராசிக்காரர்கள் திடீர் பண ஆதாயங்களைப் பெறுவார்கள். உங்களின் நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். ராகுவின் பார்வையால் செல்வம் ஈட்டும் ஆசை அதிகரிக்கும். ஆனால் எட்டாவது வீட்டின் தொடர்பு காரணமாக நீங்கள் தவறான சகவாசத்தில் சிக்க நேரிடலாம். எனவே கவனமாக இருக்க வேண்டும். ராகுவின் பார்வையால் அதிக தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம் தந்திரம் அதிகரிக்கும். ஆனால் குறுக்கு வழியை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இது உங்கள் எதிரிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தலாம். புத்திசாலித்தனமாக செயல்பட்டால் எதிரிகளை தோற்கடித்து நீங்கள் வெற்றியாளராக மாறுவீர்கள்.

45
தனுசு

தனுசு ராசிக்காரர்களின் ஜாதகத்தில் ராகு மூன்றாவது வீட்டில் அமர்ந்துள்ளார். அவரது பார்வை 7, 9, 11 ஆகிய வீடுகளில் விழுகிறது. இதனால் தனுசு ராசிக்காரர்கள் பல துறைகளில் வெற்றிகளைப் பெற உள்ளீர்கள். ராகுவின் விருப்பமான இடமாக மூன்றாவது இடம் கருதப்படுகிறது. இந்த வீடு, வீரம், முயற்சி, ஊடகம், கலை ஆகியவற்றுடன் தொடர்புடையது. ராகுவின் பார்வை 11 ஆம் வீட்டில் விழுவதன் காரணமாக உங்களின் தொழில் விருப்பங்கள் நிறைவேறும். தொழிலில் லாபம் ஏற்படும். ஆனால் ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். ராகுவின் பார்வை ஏழாம் வீட்டில் விழுவதால் நீதிமன்ற வழக்குகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்போது உங்களுக்கு சாதகமான நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தினரை அனுசரித்து நடந்தால் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

55
பரிகாரம்

ராகுவின் எதிர்மறை தாக்கத்தை தவிர்ப்பதற்கு திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். சனி மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் அரச மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம். சனிக்கிழமைகளில் ராகுவுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது ராகுவை அமைதிப்படுத்த உதவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள், ஜோதிட கருத்துக்கள், பஞ்சாங்கம் மற்றும் மத நூல்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. இந்த தகவலை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை)

Read more Photos on
click me!

Recommended Stories