Astrology: உச்ச ராசிக்கு செல்லும் புதன்.! உருவாகும் மங்களகரமான ராஜயோகம்.! அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 3 ராசிகள்

Published : Sep 10, 2025, 11:23 AM IST

புதன் பகவான் தனது உச்ச ராசியான கன்னி ராசியில் சஞ்சரிக்க இருப்பதால், பத்ர மகாபுருஷ ராஜயோகம் உருவாகிறது. இந்த மங்களகரமான யோகம் சில ராசிகளுக்கு பல நன்மைகளை தரவுள்ளது.

PREV
14
பத்ர மகாபுருஷ ராஜயோகம் 2025

ஜோதிடத்தின்படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து பிற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது பிற கிரகங்களின் குறிப்பிட்ட தொலைவில் அமைந்தோ சில ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் பித்ருபக்ஷ காலத்தில் செப்டம்பர் 15 ஆம் தேதி புதன் பகவான் அதன் உச்ச ராசியான கன்னி ராசிக்குள் நுழைகிறார். புதன் பகவான் ஞானம், பேச்சு, வணிகம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். உச்ச ராசியில் புதன் சஞ்சரிப்பதால் பத்ர மகாபுருஷ ராஜயோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் மிகவும் மங்களகரமான யோகமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக சில ராசிகள் அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
மகரம்

பத்ர மகாபுருஷ ராஜயோகம் மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், சாதகமாகவும் இருக்கும். கன்னி ராசியில் புதனில் சஞ்சரிக்கும் போது மகர ராசிக்காரர்களுக்கு புதன் ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிப்பார். இதன் காரணமாக அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் லாபம் இரட்டிப்பாகும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். வேலையில்லாமல் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு, நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. சொந்தமாக தொழில் செய்து வருபவர்கள் தங்கள் நிதி நிலைமையில் அதிகரிப்பை காண்பீர்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரலாம்.

34
தனுசு

பத்ர மகாபுருஷ ராஜயோகத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு அடுத்த சில நாட்கள் மிகவும் நல்லதாக இருக்கும். இந்த ராஜயோகம் உங்களுக்கு பல வழிகளில் நன்மைகளை வழங்கும். தனுசு ராசியின் பத்தாவது வீடான கர்ம பாவத்தில் இந்த யோகம் உருவாவது மிகுந்த சிறப்பாகும். நீங்கள் தொழில் மற்றும் வணிகத்தில் அபரிமிதமான வளர்ச்சியை காணலாம். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பொறுப்புகள் கிடைக்கலாம். சில சிறப்பு திட்டங்களில் முதன்மையான பொறுப்புகளையும் நீங்கள் பெறலாம். உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் முன்னேற்றத்தை காணலாம். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் நீங்கள் பெறுவீர்கள். இந்த யோகத்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருடன் நெருக்கம் அதிகரிக்கும். இதன் காரணமாக மன மகிழ்ச்சி நிலவும்.

44
சிம்மம்

பத்ர மகாபுருஷ ராஜயோகத்தின் போது புதன் சிம்ம ராசியின் இரண்டாவது இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இதன் காரணமாக உங்கள் நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் உங்களின் மதிப்பு, மரியாதை உயரும். புதிய அந்தஸ்து கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொழிலில் நல்ல லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. லாபம் இரட்டிப்பாகும். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் வணிகத்தை விரிவாக்கி பெரிய அளவில் தொழில் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வணிகம் பல இடங்களுக்கு பெருகும். குடும்பத்தில் நிலவி வந்த சிறு சிறு பிரச்சனைகள் சரியாகி அமைதியான சூழல் நிலவும். பிரிந்து சென்ற கணவன் மனைவி மீண்டும் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் இருந்து வந்த ஆரோக்கியப் பிரச்சினைகள் சரியாகி மனமகிழ்ச்சி ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் அடிப்படையில் பெறப்பட்டவை மட்டுமே. இந்த தகவல்களை ஏசியாநெட் தமிழ் நிறுவனம். சரி பார்க்கவில்லை. இதன் விளைவுகள் மற்றும் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories