Astrology : கும்ப ராசியில் இணையும் ராகு சந்திரன்.! 5 ராசிக்காரர்கள் ரொம்ப அவமானத்தையும், கஷ்டத்தையும் அனுபவிக்கப் போறீங்க.!

Published : Sep 11, 2025, 11:36 AM IST

Rahu-Moon conjunction: செப்டம்பர் மாதம் கும்ப ராசியில் ராகு மற்றும் சந்திரன் இணைவதால் சில ராசிக்காரர்கள் மோசமான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Rahu-Moon conjunction (ராகு சந்திரன் சேர்க்கை)

ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றன. இதன் காரணமாக சுப பலன்களும், அசுப பலன்களும் உருவாகின்றன. அந்த வகையில் கும்ப ராசியில் ராகு சந்திரன் சேர்க்கை கிரகண யோகத்தை உருவாக்க இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் மோசமான பலன்களை அனுபவிக்க உள்ளனர். 

தற்போது ராகு பகவான் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். மகர ராசியில் சஞ்சரித்து வரும் சந்திர பகவான் விரைவில் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். கும்ப ராசியில் சந்திரன் ராகு இணைந்து கிரகண யோகத்தை உருவாக்குவதால் சில ராசிக்காரர்களுக்கு மோசமான காலம் துவங்கவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த கிரகண யோகம் சில அசுப பலன்களை வழங்கும். குழந்தைகள் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படலாம். ஆரோக்கியத்திலும் சிறிது பின்னடைவு ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடன் சண்டை, சச்சரவு ஏற்படலாம். உறவுகளில் விரிசல் ஏற்படுவதன் காரணமாக மனரீதியாக பாதிப்புகள் ஏற்படலாம். வேலையில் அழுத்தமும் அதிகரிக்கும். இது உங்களுக்கு மன நெருக்கடியை மேலும் அதிகரிக்கும். எனவே மிதுன ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது எதிர்மறை விளைவுகளை குறைக்க உதவும்.

36
துலாம்

கும்ப ராசியில் ராகு சந்திரன் இணைவதன் காரணமாக துலாம் ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படலாம். அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம். கண்ணியத்திற்கு குறைவு ஏற்படலாம். தங்கள் மரியாதையை பாதுகாப்பதற்காக அவர்கள் மிகவும் மெனக்கிட வேண்டிய சூழல் இருக்கும். வியாபாரம் செய்து வருபவர்கள் இந்த நேரத்தில் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளலாம். லாபமும் பெரிய அளவில் எதிர்பார்க்க முடியாது. உங்கள் தைரியம் மற்றும் தன்னம்பிக்கைக்கும் குறைவு ஏற்படலாம். திருமணம் ஆனவர்களுக்கும் பிரச்சினை ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் சில சிக்கல்களை எதிர்கொள்ளலாம். எனவே இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்கள் மனதிற்கு பிடித்த இறைவனை விடாது வழிபட்டால் இந்த சிக்கல்களில் இருந்து விடுபடலாம்.

46
சிம்மம்

கிரகண யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களும் சில அசுப பலன்களை பெறலாம். இந்த காலத்தில் அவர்கள் நிதி சார்ந்த விஷயங்களில் மிக கவனமாக செயல்பட வேண்டும். முதலீடுகள் செய்வதற்கு முன்னர் நன்கு யோசித்து செயல்பட வேண்டும். தனிப்பட்ட வாழ்க்கையில் சில அவமானங்களையும் சந்திக்க நேரலாம். எனவே பொறுமை காப்பது அவசியம். குடும்ப உறவை பொறுத்தவரை வாழ்க்கை துணையுடன் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தொழில் வாழ்க்கையிலும் சில பின்னடைவை சந்திக்கலாம். இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படலாம். வணிகத்தில் கூட்டு வைத்திருப்பவர்களுடன் சில பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்திலும் பின்னடைவு ஏற்படும் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.

56
கும்பம்

கும்ப ராசியில் இந்த யோகம் ஏற்படுவதால் கும்ப ராசிக்காரர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். வாகனம் ஓட்டும்பொழுது விபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், வாகன ஓட்டுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிரிகள் உங்களுக்கு எதிராக சதி செய்யலாம். இது உங்கள் வாழ்க்கையில் மிகுந்த குழப்பத்தை விளைவிக்கலாம். வேலை செய்து வருபவர்களுக்கு பலவிதமான தடைகள் ஏற்படலாம். வாழ்க்கையில் சவால்கள் ஏற்படலாம். நிதி இழப்புகளும் ஏற்படும் வாய்ப்பு உண்டு. பெரிய இழப்புகளை தவிர்ப்பதற்கு பேச்சில் நிதானமாக இருக்க வேண்டும். சுற்றியுள்ள சூழ்நிலைகளை கவனிக்க வேண்டும். துர்க்கை வழிபாடு உங்களுக்கு இந்த கடினமான காலத்தை கடக்க உதவும்.

66
ரிஷபம்

ராகு சந்திரன் இணைவதால் ரிஷப ராசிக்காரர்களும் சவாலான காலத்தை சந்திக்க இருக்கிறீர்கள். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். முன்பு இருந்த பிரச்சனைகள், உடல் நலக்குறைவுகள் மீண்டும் ஏற்படலாம். எனவே கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இந்த யோகம் உங்கள் நிதி நிலைமையை கடுமையாக பாதிக்கலாம். செலவுகள் அசாதாரணமாக அதிகரிக்கலாம். இதன் காரணமாக மன அழுத்தமும் அதிகரிக்கலாம். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாதீர்கள். வேலை செய்யும் இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். விஷ்ணு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி துளசி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் இந்த கடினமான காலத்தை கடக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories