Astrology: செவ்வாய் மூவ்.! தேடி வரப்போகும் கோடீஸ்வர யோகம்.! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.! நிலம், வீடு, பதவி கையிக்கு வரும்.!

Published : Sep 11, 2025, 10:35 AM IST

செவ்வாயின் பெயர்ச்சி மேஷம், சிம்மம், தனுசு ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். நிலம், வீடு, பதவி உயர்வு, வெளிநாட்டு வாய்ப்புகள் போன்ற பலன்கள் கிடைக்கும். பணக்கஷ்டங்கள் நீங்கி செல்வ வளம் பெருகும்.

PREV
15
வளர்ச்சி, லாபம், அதிர்ஷ்டம், பணவரவு.!

செவ்வாய் கிரகம் ஜோதிடத்தில் சக்தி, துணிவு, போராட்டம், வீரியம், அதிகாரம் மற்றும் நிலமைகள் ஆகியவற்றுக்கு பிரதான காரணமாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் செவ்வாய் சக்தி வலுவாக செயல்பட்டால், அவருக்கு நிலம், வீடு, பதவி, வாகனம், பணம், ஆட்சி அதிகாரம் போன்ற பெரும் பலன்கள் கிட்டும். தற்போதைய காலத்தில் செவ்வாய் மேற்கொண்டிருக்கும் முக்கியமான மூவ் (Transit) சில ராசிகளுக்குப் பெரும் அதிர்ஷ்ட வாய்ப்புகளைத் தருகிறது.இனி அவர்கள் பணக்கஷ்டங்களை மறந்து, வளர்ச்சி பாதையில் பாய்ந்து, நிலம் மற்றும் சொத்து வாங்கி, செல்வவாழ்வு அனுபவிக்கப் போகிறார்கள். குறிப்பாக மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மூவால் அற்புதமான பலன்கள் கிடைக்க இருக்கின்றன.

25
மேஷ ராசி: பதவி உயர்வு, சம்பள உயர்வு.!

செவ்வாய் உங்கள் அதிபதி என்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு தற்போதைய மூவ் மிகுந்த ஆதாயத்தை தருகிறது. நீண்டநாள் ஆசையாகக் கனவு கண்ட நிலம் வாங்கும் வாய்ப்பு நடைமுறையில் கைகூடும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் சந்தர்ப்பம் விரைவில் வந்து சேரும். வேலைப்புரியும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற உயர்ந்த நிலைகள் கிடைக்கலாம். வெளிநாட்டு வருமான வாய்ப்புகள் விரிவடைந்து, பழைய கடன்களையும் திடீர் வருமானத்தால் தீர்க்கும் சூழல் உருவாகும். மொத்தத்தில், மேஷ ராசிக்காரர்கள் செல்வத்தாலும் பதவியாலும் பெருமை பெறும் காலம் இது.

35
சிம்ம ராசி: சிக்கல் தீர்ந்து சொத்து கைக்கு வரும்.!

சூரியன் ஆட்சியால் பிரபலமான சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சக்தி மிகப் பெரிய ஆதரவாக இருக்கும். நிலம் மற்றும் சொத்து தொடர்பான சிக்கல்கள் எளிதில் தீர்ந்து விடும். வழக்கு மற்றும் சட்ட பிரச்சனைகளிலும் வெற்றி கிட்டும் என்பதால், மனநிறைவு அதிகரிக்கும். வேலைப்புரியும் இடத்தில் அரசாங்க ஆதாயம் கிடைத்து, பெரிய பொறுப்பு வழங்கப்படும். புதிய வீட்டைக் கட்டும் ஆசையும் நிறைவேறும் நிலையில் இருக்கும். வெளிநாட்டு பயண வாய்ப்பு கிடைத்து, குடும்பத்தில் அமைதி நிலைத்து, உறவினர்களிடமிருந்து நிதி ஆதரவும் வந்து சேரும். சிம்ம ராசிக்காரர்கள் ராஜபாட்டையாய் வாழும் அற்புத தருணத்தை அனுபவிக்கும் காலம் இது.

45
தனுசு - தடைகள் காணாமல் போகும்.!

செவ்வாய் மூவால் தனுசு ராசிக்காரர்களுக்கும் புதிய செல்வ வாய்ப்புகள் உருவாகின்றன. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஏற்பட்ட தடைகள் அகன்று விடும். கூட்டுத் தொழிலில் பெரும் லாபம் கிட்டும் என்பதால், எதிர்பாராத வருமான வளர்ச்சி கூடும். நிலம், தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பப்பொருளாதார சுமைகள் குறைகின்றன. பெரியோரின் ஆசீர்வாதத்தால் வெளிநாட்டு தொடர்புகள் புதிய வாயில்களைத் திறக்கும். திடீர் பணவரவுகள், பரிசுகள் வந்து சேரும். சொத்திலும் செல்வ வளத்திலும் தனுசுக்காரர்களுக்கு முன்னேற்றம் உறுதி.

55
கோடீஸ்வர யோகம் காத்திருக்க மாமு.!

இந்த செவ்வாய் மூவால் மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் வருங்காலத்தில் கோடீஸ்வர யோகத்தை அடைகிறார்கள். நிலம், வீடு, பதவி, வாகனம் போன்ற அனைத்து கனவுகளும் கையிலிருந்து கைவிடாமல் வந்து சேரும். பணக்கஷ்டங்கள் முற்றிலும் நீங்கும் என்பதால், உண்மையிலேயே மூட்டை மூட்டையாக பணம் சேரும் காலம் இது. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கிறது – அதை பயன்படுத்தத் தயாராக இருக்கவும்!

Read more Photos on
click me!

Recommended Stories