Astrology: 12 வருடங்களுக்குப் பிறகு குரு பகவான் நிகழ்த்திய அற்புதம்..! 5 ராசிகளுக்கு கூரைய பிச்சிட்டு செல்வம் கொட்டப் போகுது.!

Published : Sep 11, 2025, 10:34 AM IST

Dwi Dwadash yog 2025: செப்டம்பர் 11 அன்று குரு மற்றும் சுக்கிர பகவான் இணைந்து த்வி த்வாதஷ் யோகத்தை உருவாக்குகின்றனர். இந்த யோகத்தால் பலன் பெறும் மூன்று ராசிகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

PREV
16
Dwi Dwadash yog 2025

ஜோதிட சாஸ்திரங்களின்படி தேவர்களின் குருவாக குரு பகவான் கருதப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் வரை தங்குவார். அவர் மீண்டும் ஒரு ராசிக்கு வர 12 ஆண்டுகள் ஆகும். குரு பகவான் அறிவு, புத்திசாலித்தனம், அதிர்ஷ்டம், செல்வம், குழந்தைகள், திருமணம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். அதேபோல் சுக்கிரன் மகிழ்ச்சி, அன்பு, செல்வம், அழகு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். குருவின் பார்வை 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தற்போது அவர் மிதுன ராசியில் அமர்ந்திருக்கிறார். இந்த நிலையில் அவர் கடக ராசியில் இருக்கும் சுக்கிரனுடன் இணைந்து த்வி த்வாதஷ் யோகத்தை உருவாக்குகிறார்.

செப்டம்பர் 11 ஆம் தேதி அதிகாலை 4:39 மணிக்கு குரு மற்றும் சுக்கிரன் இருவரும் 30 டிகிரி கோணத்தில் அமைந்து இந்த யோகத்தை உருவாக்குகின்றனர். தேவர்களின் குருவான குரு பகவானும், அசுரர்களின் குருவான சுக்கிர பகவானும் இணைவதால் சில ராசிக்காரர்கள் சிறப்பு பலன்களைப் பெற உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மேஷம்

இந்த யோகம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமான மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. குரு உங்கள் ஜாதகத்தின் மூன்றாவது வீட்டை பார்க்கிறார். இதன் காரணமாக உடன் பிறந்தவர்களுடன் உறவு வலுப்படும். அதே நேரம் சுக்கிரன் நான்காவது வீட்டை பார்க்கிறார். இது குடும்ப மகிழ்ச்சி, தாய் வழி உறவுகளை மேம்படுத்தும். இந்த யோகம் உங்களின் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய துவக்கங்களை கொண்டு வரலாம். நீங்கள் புதிய வேலை அல்லது புதிய தொழில் தொடங்குவோ திட்டமிட்டு இருந்தால் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக அமையும். முதலீடு மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்கும். எந்த ஒரு விஷயத்தை செய்வதற்கு முன்னர் நன்கு யோசித்து செய்ய வேண்டும். விஷ்ணு பகவானை பூஜிப்பது நன்மைகளைத் தரும்.

36
கடகம்

கடக ராசிக் காரர்களுக்கு இந்த யோகம் பல வழிகளில் நன்மைகளை அளிக்க உள்ளது. சுக்கிர பகவான் உங்கள் ராசியில் சஞ்சரித்து உங்கள் லக்னத்தை வலுப்படுத்துகிறார். இதன் காரணமாக உங்கள் சுயமரியாதை, ஆரோக்கியம், தன்னம்பிக்கை ஆகியவை அதிகரிக்கும். குரு 12 வது வீட்டில் இருப்பதால் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த யோகமானது வெளிநாட்டு பயணம் அல்லது பிற முதலீடுகளில் முதலீடு செய்வதன் மூலம் சரியான திசையில் அதை எடுத்துச் செல்லும். காதல் மற்றும் உறவுகள் வலுப்படும். ரியல் எஸ்டேட் அல்லது குடும்ப வணிகத்தில் ஈடுபட்டிருந்தால் லாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்துடன் நேரம் செலவிடுவது எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க உதவும். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிறப் பொருட்களை தானம் செய்யலாம், வெள்ளை மலர்களால் அர்ச்சித்து சுக்கிர பகவானை வழிபடுங்கள்.

46
சிம்மம்

சிம்ம ராசிக்கு இந்த யோகம் செழிப்பையும், மரியாதையும் தரும். குரு உங்கள் வருமானத்திற்கான ஆதாரத்தை பெருக்குவார். உங்கள் 12-வது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் வெளிநாட்டு மூலங்களில் இருந்து பணம் அல்லது எதிர்பாராத நன்மைகள் கிடைக்கலாம். தொழிலில் முன்னேற்றம், வேலைகளில் வெற்றி, உறவுகளில் நெருக்கம் ஆகியவை ஏற்படலாம். நீங்கள் கலை, பொழுதுபோக்கு அல்லது தலைமை பொறுப்பில் இருந்தால் இந்த நேரம் உங்களுக்கு சாதகமானதாக அமையும். உங்களின் சமூக அந்தஸ்து உயரும். மஞ்சள் பொருட்களை தானம் செய்வது சிவ வழிபாடு ஆகியவை நன்மை பயக்கும். இந்த நேரத்தில் சில தேவையற்ற செலவுகள் ஏற்படும் என்பதால் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

56
தனுசு

தனுசு ராசிக்காரர்களின் அதிபதியான குரு, ஏழாவது வீட்டை பாதிப்பதால் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். வணிகம், கூட்டாண்மை, திருமண வாழ்க்கை ஆகியவற்றின் மூலம் மன நிம்மதி ஏற்படும். எட்டாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பரம்பரை சொத்துக்கள் மூலம் நிதி ஆதாயம், எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படலாம். இதன் காரணமாக உங்களுக்கு லாபம் ஏற்படும். கல்வி பயணம் அல்லது ஆன்மீகம் சார்ந்த துறையில் ஈடுபட்டிருந்தால் உங்கள் முன்னேற்றத்திற்கான நேரமாகும். வணிக ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் வெற்றிகரமாக அமையும். ஆன்மீக நடவடிக்கைகளில் ஈடுபடுவது உங்கள் செல்வ செழிப்பை மேலும் அதிகரிக்கும். குரு மந்திரத்தை உச்சரிப்பது தானம் செய்வதை இரட்டிப்பு நன்மைகளை வழங்கும்.

66
மீனம்

மீன ராசியின் அதிபதியான குரு பகவான் உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இது தாய், குடும்ப மகிழ்ச்சி, சொத்து தொடர்பான விஷயங்களை பலப்படுத்தும். ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்க இருக்கிறார். ஐந்தாவது வீடானது குழந்தைகள், படைப்பாற்றல், கல்வி, கலை ஆகியவற்றை குறிக்கும். இதன் காரணமாக இந்த துறைகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். குழந்தை இல்லாமல் இருந்து வருபவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். படைப்பு வேலைகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்வது, அரிசி அல்லது பால் தானம் செய்வது நன்மை பயக்கும். குடும்ப விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட கருத்துக்கள் மற்றும் மத நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இவை தகவல்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன் ஏசியாநெட் தமிழ் நிறுவனம் அதை சரிபார்க்கவில்லை. இதன் நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories