ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூலை மாதத்தின் முதல் பாதியிலேயே இரண்டு முக்கிய கிரகங்களின் இடப்பெயர்ச்சி நிகழவுள்ளது. ஆடம்பரம், செல்வம் மற்றும் வசதிகளுக்கு அதிபதியான சுக்கிரன் ஜூலை 4ம் தேதி கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குக் இடம் பெயர்கிறார். அதேபோல் அதிகாரம், தன்னம்பிக்கை மற்றும் அங்கீகாரத்தின் காரகனான சூரிய பகவான் ஜூலை 16ம் தேதி மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் மாற்றத்தால் 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ராஜயோகம் அடிக்கப்போகிறது.
25
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் சூரியன் நான்காம் வீட்டிலும், சுக்கிரன் ஐந்தாம் வீட்டிலும் சஞ்சரிக்கவுள்ளார்கள். இதனால் பணியிடத்தில் பெரிய அங்கீகாரமும், அதிர்ஷ்டமும் தேடி வரும். புதிய வேலை தேடுபவர்களுக்குச் நல்ல நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் கதவைத் தட்டும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுபவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதால் நிதிநிலை சீராகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், மனநிறைவும் நிலவும்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தொழில் ரீதியாகப் பிரம்மாண்டமான வெற்றிகளை தரப்போகிறது. புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் கைகூடி வரும். அலுவலகத்தில் உங்களின் திறமைக்குத் தகுந்த அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கும். உங்களைப் பற்றித் தவறாக நினைத்தவர்கள் தங்களை மாற்றிக்கொள்வார்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
கன்னி ராசியினருக்கு இந்த ஜூலை மாதம் அவர்களின் தொழில் வாழ்க்கையில் ஒரு மாபெரும் மைல்கல்லாக அமையப்போகிறது. தொட்ட காரியங்கள் அனைத்தும் துரிதமாக வெற்றியடையும். நீண்ட நாள் ஆசைகள் மற்றும் திட்டங்கள் நிறைவேறும். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற பண பலன்கள் கைக்கு வரும். இந்த காலகட்டத்தில் வரும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் அடுத்த நிலைக்குச் செல்லலாம்.
55
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் முழுமையாகப் பக்கபலமாக இருக்கப்போகிறது. உங்களின் சாதுரியமான பேச்சின் மூலம் புதிய தொழில் ஒப்பந்தங்களைப் பெற்று லாபத்தைக் குவிப்பீர்கள். வேலையில்லாதவர்களுக்குப் வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதன் மூலம் வருமானம் அதிகரிப்பதுடன், பணத்தைச் சேமிக்கவும் தொடங்குவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.