Vedic Astrology: குரு - சந்திரனால் 6 ராசிகளுக்கு தேடி வரும் ராஜயோகம்.! கடன் பிரச்சனைகள் நீங்கி பணமழை கொட்டப்போகுது.!

Published : Jun 28, 2026, 11:25 AM IST

Vedic Astrology: கிரகங்களின் நிலை காரணமாக ஜூலை முதல் வாரத்தில் அபூர்வமான ‘பரிவர்த்தன யோகம்’ உருவாக இருக்கிறது. இதன் காரணமாக ஆறு ராசிக்காரர்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெற உள்ளனர். அது குறித்து இங்கு காணலாம். 

PREV
17
Vedic Astrology

ஜோதிடத்தின்படி ஜூன் மாத இறுதியிலும் ஜூலை மாத தொடக்கத்திலும் குரு மற்றும் சந்திரனுக்கு இடையே கிரகப் பரிவர்த்தனை நிகழவுள்ளது. இந்த இரண்டு கிரகங்களுக்கு இடையிலான பரிவர்த்தனைக்கு ஜோதிடத்தில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குரு பகவான் சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய கடக ராசியிலும், சந்திரன் குருவின் ஆதிக்கத்திற்குரிய தனுசு ராசியிலும் சந்திக்கின்றனர். இதன் காரணமாக ஆறு ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியம், சொத்து விவகாரங்கள், சுப நிகழ்ச்சிகள் தொடர்பான முயற்சிகளில் வெற்றி, வருமான அதிகரிப்பு, செல்வ செழிப்பு உயர்வு ஆகியவற்றைப் பெறுவார்கள். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:  Rahu Ketu Transit: ராகு, கேது, சனி பெயர்ச்சி: 3 ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்கள்!

27
மேஷம்

மேஷ ராசியின் நான்கு மற்றும் ஒன்பதாம் வீடுகளின் அதிபதிகள் பரிவர்த்தனை அடைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்து வருபவர்களுக்கு நிறைவான ஊதியத்துடன் புதிய வேலை கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு வருமானத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொத்து தொடர்பான நடவடிக்கைகள் வேகம் பெறும். புதிய சொத்துக்களை வாங்கலாம். ஆரோக்கியம் நல்ல முன்னேற்றத்தை அடையும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களின் பேச்சுக்கு, அதிக மதிப்பும், முக்கியத்துவமும் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:  Akhanda Rajayogam: ஜூலை 1-ல் உருவாகும் அகண்ட ராஜயோகம்.! 6 ராசிக்காரர்களுக்கு மகா பாக்யம்.!

37
மிதுனம்

தன ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள குருவுடன், சந்திரன் இடமாற்றம் (பரிவர்த்தனை) செய்வதால் மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் பொன்னான வாய்ப்புகள் கிடைக்கும் மாதமாக இருக்கும். கடந்த கால நிதி நெருக்கடிகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு கணிசமாக உயரும். பல வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும். வருமானம் ஈட்டுவதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடியும். உங்கள் செல்வாக்கும், அந்தஸ்தும் அதிகரிக்கும். தொழில் லாபத்தை நோக்கி நகரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நல்லிணக்கமும் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் பெரிய வெற்றியைப் பெறுவார்கள். படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள்:  எதிர் எதிர் திசையில் ராகு - சுக்கிரன்.! 5 ராசிகளுக்கு குபேர யோகம்.! அரசு வேலை, பணம், புகழ், பதவி தேடி வரப்போகுது.!

47
கன்னி

நான்கு மற்றும் பதினோராம் வீட்டு அதிபதிகளுக்கு இடையே நடக்கும் பரிவர்த்தனையால் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும். நிதி மற்றும் தனிப்பட்ட சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்து, வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு காரியத்திலும் வெற்றி கிடைக்கும். வருமானத்தில் அபரிமிதமான வளர்ச்சி காணப்படும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும். வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். செல்வாக்கு மிக்க நபர்களுடன் பயனுள்ள தொடர்புகள் ஏற்படும். தொழில், வேலை, வணிகம் ஆகிய அனைத்திலும் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். உபரி வருமானத்திற்கான வழிகளை கண்டறிவீர்கள். குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

இதையும் படியுங்கள்:  அக்டோபர் 31 வரை 6 ராசிகளுக்கு ஜாக்பாட்! குரு, சுக்கிரன், புதன் தரும் ராஜயோகம்.!

57
துலாம்

மூன்று மற்றும் பத்தாம் வீட்டு அதிபதிகளுக்கு இடையிலான இடமாற்றத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான அமைப்பு உருவாகிறது. இது தொழில் ரீதியாக பல நன்மைகளைத் தரும். தனியார் துறையில் வேலை பார்த்து வருபவர்களுக்கு சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். வேலை மாறும் வாய்ப்புகள் உருவாகும். வேலையில்லாதவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் எதிர்பாராத வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் வரத் தொடங்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். நீங்கள் வாங்கி வைத்த பழைய சொத்துக்கள் மதிப்பு கணிசமாக உயரும்.

இதையும் படியுங்கள்:  Sani Peyarchi 2026: சனியின் ஆட்டம் துவக்கம்..! கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் யார்?

67
விருச்சிகம்

தன ஸ்தான அதிபதியான குரு மற்றும் பாக்கிய ஸ்தான அதிபதியான சந்திரன் ஆகியோருக்கு இடையிலான இடமாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு யோகத்தைத் தரும். நீங்கள் தொட்ட அனைத்தும் தங்கமாக மாறும். சமூகத்தில் புதிய கௌரவத்தையும், அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். அரசியல் செல்வாக்கு உயரும். பணியில் இருப்பவர்களுக்கும் வேலை தேடுபவர்களுக்கும் வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கலாம். பல வழிகளில் இருந்து வருமானம் வந்து சேரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். வசதியான வாழ்க்கைத் துணைத் அமையும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குரு பகவானின் ஆசியால் மாணவர்கள் கல்வி மற்றும் ஞானத்தில் சிறந்து விளங்குவார்கள்.

77
மீனம்

பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி மற்றும் கர்ம ஸ்தான அதிபதிகளுக்கு இடையிலான இடமாற்றத்தால் வேலை, தொழில், வணிக முயற்சிகள் அனைத்தும் மீன ராசிக்காரர்களுக்கு கைகூடும். படித்து முடித்த இளைஞர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து வேலைக்கான அழைப்புகள் வரும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்கள் பணிக்கான அழைப்பிதழைப் பெறுவீர்கள். எதிரிகளை தோற்கடித்து வெற்றிகளைப் பெறுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். உடல் நலக் கோளாறுகளில் இருந்து விடுபட்டு மீண்டு வருவீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் எந்த ஒரு முயற்சியும் நெற்றியில் முடியும். திடீர் வருமான அதிகரிப்பு மற்றும் தொழிலில் லாபம் கிடைப்பதால் உங்கள் முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். வீடு, மனை, நிலம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். அடுத்தடுத்து நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories