இந்த தேதியில் பிறந்தீங்களா.! கோடீஸ்வரர் ஆகும் சான்ஸ் உங்களுக்கு தான்.! எந்த தேதி? முழு விபரம்

Published : Mar 26, 2026, 03:03 PM IST

பிறந்த தேதி ஒருவரின் வாழ்க்கை பாதையை பாதிக்கலாம் என்று நியூமராலஜி கூறுகிறது. இந்த எண்ணுக்கு சனி ஆதிக்கம் இருப்பதால், இவர்களின் வாழ்க்கையில் ஆரம்பத்தில் சவால்கள் மற்றும் தாமதங்கள் அதிகமாக இருக்கும்.

PREV
14
பிறந்த தேதி சொல்லும் பண வெற்றி ரகசியம்

ஒருவரின் பிறந்த தேதி வாழ்க்கையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நியூமராலஜி கூறுகிறது. குறிப்பாக 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் “எண் 8”க்குள் வருகிறார்கள். இந்த எண் சாதாரண இலக்கம் அல்ல, கர்மாவின் அடையாளமாக கருதப்படுகிறது. சனி பகவானின் ஆதிக்கத்தில் இந்த எண்ணத்தில் பிறந்தவர்கள் ஆரம்ப வாழ்க்கையில் பல சவால்களை சந்திப்பார்கள். ஆனால் அதே சவால்களே அவர்களை பின்னர் பெரிய வெற்றிக்கு வழிநடத்தும் என்பது நம்பிக்கை.

24
எண் 8 வாழ்க்கை

எண் 8க்கு அதிபதி சனி என்பதால், இந்த எண்ணத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட இரட்டிப்பு முயற்சி எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தை விட கடின உழைப்பே முக்கியம். சிறுவயதில் இருந்து சோதனைகள், தடை, தாமதம் போன்ற அனுபவங்கள் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த அனுபவங்கள் அவர்களின் மன வலிமையை உயர்த்தி, எதிர்காலத்தில் பெரிய சவால்களை சமாளிக்க தயாராக மாறுகின்றன.

34
நியூமராலஜி ரகசியம்

இந்த எண்ணத்தில் பிறந்தவர்கள் பொதுவாக அமைதியானவர்களாகவும், தங்களது உணர்ச்சிகளை வெளிப்படுத்தாதவர்களாகவும் இருப்பார்கள். குடும்ப பொறுப்பு மற்றும் வேலைக்கான அக்கறை இவர்களிடம் அதிகம் இருக்கும். வெளியில் கடினமாக தோன்றினாலும், உள்ளுக்குள் மிக நெகிழ்ச்சியான மனம் கொண்டவர்கள். அதிகம் பேசாமல் செயலில் கவனம் செலுத்துவது இவர்களின் பலம்.

44
35 வயதில் டர்னிங் பாயிண்ட்

நியூமராலஜி கணிப்புகளின்படி, 35 முதல் 36 வயதுக்குள் இவர்களின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் ஏற்படும். அதுவரை செய்த உழைப்பிற்கு பலன் கிடைக்க தொடங்கும். தொழில், வியாபாரம் அல்லது அரசியல் துறைகளில் உயர்ந்த நிலையை அடையும் வாய்ப்பு உள்ளது. உலகின் பல வெற்றிகரமான தொழிலதிபர்கள் மற்றும் தலைவர்கள் இந்த எண்ணில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுமை மற்றும் உழைப்பு சேர்ந்தால், இவர்களுக்கு கோடீஸ்வரர் நிலை எட்டுவது கடினம் அல்ல என்று நம்பப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories