பிறந்த தேதி என்பது வெறும் எண் மட்டுமல்ல. அது ஒருவரின் குணாதிசியங்கள், இயல்பு, சிந்திக்கும் முறை, திறமை மற்றும் வாழ்க்கை போன்ற பல விஷயங்களை பிரதிபலிக்கிறது. எண் கணிதத்தின் படி சில தேதிகளில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பானவர்களாகவும், புத்திசாலிகளாகவும், படைப்பாற்றல் மிக்கவர்களாகவும் இருப்பார்களாம்.
இவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த கடினமாக உழைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் எந்த ஒரு பணியையும் எளிமையாகவும், திறமையாகவும் முடிப்பார்கள். பிரச்சனை ஏற்பட்டால் அதை உடனடியாக தீர்த்து வைப்பார்கள். அந்த எண்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலிகள்
எந்த மாதத்திலும் 1,5,10,14,19,23,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலிகளாக இருப்பார்களாம். புதிய யோசனைகள், சூழ்நிலைகளை கவனிக்கும் திறன் மற்றும் நேரத்தை சரியாக பயன்படுத்துதல் போன்ற குணங்கள் அவர்களிடம் உள்ளன. மேலும் அவர்களிடம் சிறப்பான சில குணங்களும் உண்டு. குறுகிய காலத்தில் யாரையும் தங்கள் பக்கம் திருப்ப முடியும். அவர்களின் தன்னம்பிக்கை அவர்களின் வார்த்தைகளில் தெளிவாக வெளிப்படும்.
தனித்துவமான பண்புகள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்த துறையை எடுத்தாலும் அதில் சிறந்து விளங்குவார்கள். வேலை, வணிகம், கலை ஆகியவற்றில் முன்னணியில் இருப்பார்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். ஒரு விஷயத்தில் ஆர்வம் ஏற்பட்டால் அதை முழுமையாக கற்றுக் கொள்ளும் வரை அதிலிருந்து விடுபட மாட்டார்கள். இந்த பண்புகள் அவர்களை பிறரிடம் இருந்து வேறுபடுத்துகிறது.
சமூக உறவுகள்
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எந்த வேலையை எடுத்தாலும் அதை சரியான நேரத்தில் செய்து முடிப்பார்கள். இதன் காரணமாக பணியிடத்தில் அவர்களுக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்படுகிறது. மூத்த அதிகாரிகள் அவர்களை நம்பி பொறுப்புகளை கொடுக்கின்றனர். அவர்களின் வேலை என்பது தரம் மற்றும் வேகம் இரண்டையும் கொண்டுள்ளது.
சமூக உறவுகளைப் பொறுத்தவரை இவர்கள் மிகவும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொள்வார்கள். யாரிடம் எப்படி பேச வேண்டும்? எப்போது எதை பேச வேண்டும்? என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இதன் காரணமாக அவர்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனர்.
குறைகள்
இவர்களிடம் இருக்கும் ஒரு சிறு குறை அவர்கள் தங்கள் வேலையிலேயே அதிகமாக மூழ்கி இருப்பார்கள். ஒரு இலக்கை நிர்ணயித்தால் அதை அடையும் வரை ஓய்வெடுக்க மாட்டார்கள். இதன் காரணமாக அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. உறவுகளிலும் சில தவறான புரிதல்கள் ஏற்படுகிறது.
இருப்பினும் தைரியம், விடாமுயற்சி, ஒழுக்கம் அவர்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரும். எவ்வளவு சிரமங்களை சந்தித்தாலும் அவர்கள் ஒருபோதும் பின் வாங்குவதில்லை. சவால்களாக எதிர் கொண்டு எளிதாக வெற்றியைப் பெறுகின்றனர். தங்களை சுற்றி உள்ளவர்களையும் ஊக்குவிக்கின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)