Astrology: இந்த 5 ராசிக்காரங்க சின்ன வயசுல கஷ்டப்பட்டாலும், 30 வயதுக்கு மேல் பணக்காரங்களா மாறுவாங்களாம்.! உங்க ராசி இருக்கா?

Published : Nov 07, 2025, 11:49 AM IST

Zodiac signs that become rich after the age of 30: ஜோதிடத்தின்படி குறிப்பிட்ட சிலர் ராசியில் பிறந்தவர்கள் 30 வயதிற்குப் பிறகு வாழ்க்கையில் வெற்றி பெறுவார்களாம். அந்த ராசிகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

PREV
16
30 வயதிற்கு மேல் வெற்றி பெறும் 5 ராசிகள்

அனைவரது வாழ்க்கையிலும் இன்ப துன்பம், கஷ்ட நஷ்டங்கள், ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு இளமைப் பருவம் முதலே சவால்களும் தடைகளும் அதிகமாக இருக்கும். 30 வயதிற்குப் முன்னதாகவே வாழ்க்கையின் பல கட்டத்தையும் அவர்கள் பார்த்து விடுவார்கள். இதன் காரணமாக சிலர் மனரீதியாகவும் துவண்டு விடுவதுண்டு. 

ஆனால் சில ராசிக்காரர்கள் 30 வயதிற்கு பின்னர் வாழ்க்கையில் செழிப்பாக மாறுவார்களாம். அவர்களின் இயல்பான குணங்கள் முதிர்ச்சி அடைதுடன், உழைப்பு மற்றும் பொறுமை அவர்களை வெற்றியாளர்களாக மாற்றும். அப்படி 30 வயதிற்குப் பின்னர் வாழ்வில் வெற்றி அடையும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
1.மகரம்
  • மகர ராசிக்காரர்களுக்கு இளமைப் பருவம் மிகவும் சவாலானதாக இருக்கும். இவர்களை ஆளும் சனி பகவான் இவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருவதற்கு பல தடைகளை வழங்குகிறார். இதன் காரணமாக அவர்கள் ஆரம்பத்தில் சில சவால்களை சந்திக்கலாம். 
  • இருப்பினும் 30 வயதிற்கு மேல் அவர்கள் வசதியான வாழ்க்கையை வாழத் தொடங்குகிறார்கள். அவர்களின் ஒழுக்கம், பொறுமை, தொலைநோக்குப் பார்வை அவர்களை வெற்றியாளர்களாக மாற்றுகிறது. 
  • அவசரப்படாமல் நிதானமாகவும், கவனமாகவும் திட்டமிட்டு ஒவ்வொரு அடிகளையும் எடுத்து வைக்கின்றனர். இந்த தொடர்ச்சியான உழைப்பும், உறுதியான அணுகுமுறையும் 30 வயதிற்கு மேல் அவர்களுக்கு நிதி நிலைத்தன்மை மற்றும் நிர்வாகப் பதவிகளுக்கு வழிவகுக்கிறது. 
  • மெதுவான அதேசமயம் நிலையாக உயர்ந்து உச்சத்தை அடைகிறார்கள்.
36
2.ரிஷபம்
  • ரிஷப ராசிக்காரர்கள் நிலைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் தரமான வாழ்க்கை ஆகியவற்றை விரும்புபவர்கள். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காமல் நடைமுறை சிந்தனையுடன் செயல்படுகின்றனர். 
  • எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நிலையான அடித்தளத்தை அமைக்க வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டுள்ளனர். உடனடி வெற்றிகளை விட நீண்ட கால முதலீடுகள் மற்றும் உறுதியான தொழில் தேர்வுகளில் ஆர்வம் காட்டுகின்றனர். 
  • 30 வயதிற்குப் பின்னர் இவர்களின் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு காரணமாக இவர்கள் ஆடம்பரம் மற்றும் வசதியான வாழ்க்கையை வாழ்கின்றனர். 
  • இவர்களை ஆளும் சந்திர பகவானும் இவர்களுக்கு ஆடம்பரமான வாழ்க்கையை அளிக்கிறார்.
46
3.கன்னி
  • கன்னி ராசிக்காரர்களை புதன் பகவான் ஆள்கிறார். புதன் பகவான் படிப்பு, அறிவு, பேச்சு, புத்திசாலித்தனம், வணிகம் ஆகியவற்றின் காரணமான கிரகமாவார். 
  • இவர் கன்னி ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே பகுப்பாய்வுத் திறன் மற்றும் விவரங்களில் கவனம் செலுத்தும் திறனை வழங்குகிறார். இவர்கள் சுய முன்னேற்றத்திற்கான உந்துதல் கொண்டவர்கள். 
  • இவர்கள் வயதாகும் பொழுது தங்கள் திறமைகளை தீட்டி ஒவ்வொரு துறையிலும் ஆழமான நிபுணத்துவத்தை அடைகிறார்கள். இந்த நுணுக்கமான அறிவு மற்றும் வேலையில் இவர்கள் காட்டும் அர்ப்பணிப்பு இவர்களை அதிக சம்பளம் பெறும் பதவிகளுக்கு அழைத்துச் சென்று வெற்றியை உறுதி செய்கிறது. 
  • 30 வயதிற்கு பின்னர் இவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்குகின்றனர்.
56
4.துலாம்
  • துலாம் ராசிக்காரர்கள் சமநிலை, நீதி மற்றும் நல்லிணக்கத்தை விரும்புபவர்கள். இவர்களின் இந்த குணம் அவர்களுக்கு சமூகத்தில் நல்ல வட்டத்தை உருவாக்குகிறது.
  • இவர்களின் இந்த பக்குவப்பட்ட குணமானது இவர்களை வெற்றியாளர்களாக மாற்றுகிறது. சரியான நபர்களுடன் சரியான நேரத்தில் ஏற்படும் இவர்களின் தொடர்பு இலக்குகளை எளிதாக அடைய உதவுகிறது. 
  • எந்த விஷயமானாலும் மோதலை கடைபிடிக்காமல் பொறுமையாக சிந்தித்து செயலாற்றுவது இவர்களின் தனிப்பட்ட பண்பாகும். வயது ஏறும் பொழுது இவர்கள் பொறுப்புகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு நிதிகளை நிர்வகிப்பதில் சிறந்தவர்களாக மாறுகின்றனர். 
  • 30 வயதிற்கு மேல் இவர்கள் எதிர்காலத்திற்கான உறுதியான அடித்தளத்தை அமைத்து விடுவார்கள்.
66
5.கும்பம்
  • கும்ப ராசிக்காரர்கள் தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்கள் மற்றும் தனித்துவமானவர்கள். இவர்கள் புதுமையான யோசனையை முன் வைப்பார்கள். 
  • இளம் வயதில் இவர்களின் முற்போக்கு சிந்தனைகள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் அல்லது பிறரால் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருக்கலாம். ஆனால் 30 வயதிற்கு பின்னர் இவர்களின் வித்தியாசமான மற்றும் முற்போக்கு சிந்தனையின் மதிப்பை இந்த உலகம் அங்கீகரிக்கும். 
  • இவர்களின் புதுமையான சிந்தனைகள் மற்றும் சமூக மாற்றத்திற்கான ஆர்வம் பெரிய அளவில் வெற்றி பெற உதவுகிறது. இவர்கள் தங்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் வெற்றியை தங்கள் கண்டுபிடிப்புகள் மூலம் அடைகின்றனர். 
  • இளம் வயதில் இவர்கள் கஷ்டத்தை அனுபவித்து வந்தாலும் நாட்கள் செல்ல செல்ல வாழ்க்கையில் புதிய உச்சத்தை அடைவார்கள்.
     

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories