Published : Nov 07, 2025, 10:54 AM ISTUpdated : Nov 07, 2025, 10:58 AM IST
Venus Transit in Swati Nakshatra lucky zodiac signs: நவம்பர் 2, 2025 சுக்கிர பகவான் ஸ்வாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்குறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் சுப பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜோதிடத்தின்படி கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், காதல், அழகு, ஆடம்பரம், கலை, இன்பம், திருமணம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாக இருந்து வருகிறார். இவர் நவம்பர் 7, 2025 முதல் ஸ்வாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். சுக்கிரனின் ராசி மாற்றங்களின் பொழுது அது அமரும் இடம், பார்க்கும் கிரகங்கள், நட்சத்திரம் ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடும்.
நவம்பர் 2, 2025 சுக்கிரன் துலாம் ராசியில் நுழைந்து மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த நிலையில் அவர் நவம்பர் 7 ஆம் தேதி ராகுவின் சொந்த நட்சத்திரமான ஸ்வாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆவதன் காரணமாக சில ராசிகள் சாதகமான பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
35
மேஷம்
சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். இந்த நட்சத்திர மாற்றம் மேஷ ராசியினரின் தொழில் வாழ்க்கையில் மகத்தான மாற்றங்களை கொண்டு வரவுள்ளது.
பணியிடத்தில் இருந்து வந்த மன அழுத்தங்கள் நீங்கி, மன மகிழ்ச்சியுடன் வேலையை தொடங்குவீர்கள்.
பணி மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். நேர்காணல் முடித்திருப்பவர்கள் விரைவில் சுப செய்திகளை கேட்பீர்கள்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடிக்க சிறந்த காலமாக இருக்கும். தலைமைத்துவம் மற்றும் நிர்வாக திறன்கள் வலுப்பெறும்.
தொழில் செய்து வருபவர்கள் அரசு ஒப்பந்தங்கள் அல்லது பிற ஆர்டர்கள் மூலம் லாபத்தைப் பெறுவீர்கள்.
ஸ்வாதி நட்சத்திரத்தில் சுக்கிரன் பிரவேசிப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு நேர்மறையான மாற்றங்களை அளிக்கும்.
வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கி, முன்னேற்றம் ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும்.
ஏழ்மை நீங்கி பொன், பொருள், வசதிகள், ஆடம்பரத்தை அனுபவிக்க இருக்கிறீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான காலமும் நெருங்கியுள்ளது.
நிறைவேறாமல் இருந்து வந்த ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம்.
உடல்நலப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும்.
55
சிம்மம்
சுக்கிரனின் ஸ்வாதி நட்சத்திர பெயர்ச்சியானது சிம்ம ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்களை வழங்க உள்ளது. இந்த காலகட்டத்தில் வருமானம் கணிசமாக அதிகரிக்கும்.
பல்வேறு வழிகள் மூலம் வருமானத்தை ஈட்ட முடியும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
குழுவாக பணிபுரிபவர்களுக்கு பெரிய அளவில் நன்மைகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள், நிலம், மனை, வாகனம் ஆகியவற்றை வாங்கும் யோகம் கிடைக்கும்.
வேலை செய்து வருபவர்களுக்கு ஒரு குழுவை தாங்கும் அளவிற்கு தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)