ஜோதிடத்தின் படி, ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் எதார்த்த அணுகுமுறை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பொரும்பாலும், துணையை குறித்து கவலைப்படுவதை தவிர்க்க தங்களது உணர்ச்சிகளை மறைப்பார்கள். மேலும் இவர்கள் வேலை தொடர்பான பிரச்சினைகள், தனிப்பட்ட சவால்கள் குறித்து எப்போதுமே ரகசியமாக வைத்திருப்பார்கள். ஏனெனில், அவர்கள் வலிமையாக தெரிய விரும்புவார்கள். இதனால் ரகசியங்கள் வெளிப்படுத்தமாட்டார்கள்.