Parivartana Yoga 2026: சுக்கிரன் சந்திரனின் அபூர்வ கூட்டணி.! குபேர யோகத்தை பெறப்போகும் அந்த 6 அதிர்ஷ்ட ராசிகள் யார்?

Published : Jun 12, 2026, 07:09 AM IST

Venus Moon Parivartana Yoga 2026: ஜோதிடத்தின்படி, இந்த மாதம் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சுக்கிரனுக்கும் சந்திரனுக்கும் இடையே நடக்கும் சஞ்சாரம், 6 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான அதிர்ஷ்டத்தையும், பண வரவையும் தரப்போகிறது. 

PREV
16
மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனோடு சந்திரன் தன வீட்டில் சஞ்சரிப்பதால், வருமானத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் 100% வெற்றியில் முடியும். கூடுதல் வருமானத்தை நீங்கள் சரியாக முதலீடு செய்வீர்கள். உயர்ந்த குடும்பத்தில் திருமணம் அல்லது சுப நிகழ்வுகள் நடக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை அள்ளிக் கொடுக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.

Today Rasi Palan: இன்று சுக்கிர பிரதோஷம்.! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

26
ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன், சந்திரனோடு 3-ம் வீட்டில் பயணிக்கிறார். இதனால், நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் பலன் தரும். பயணங்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமணம், வேலை முயற்சிகள் வெற்றி பெறும். காதல் கைகூடும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். பல வழிகளில் செல்வம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பங்குச்சந்தை லாபகரமாக இருக்கும்.

Labh Drishti Rajyog 2026: குரு - செவ்வாய் இணைவு.! 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!

36
கடகம்

கடக ராசி அதிபதி சந்திரனுக்கும், லாபாதிபதி சுக்கிரனுக்கும் இடையே நடக்கும் பரிவர்த்தனையால், இந்த மூன்று நாட்களில் நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் 100% ஜெயிக்கும். வேலையில் பதவி உயர்வு இருக்கும். சம்பளம் கணிசமாக உயரும். தொழில், வியாபாரம் பரபரப்பாக இருக்கும். நல்ல அந்தஸ்து, சம்பளத்துடன் புது வேலைக்கு மாறும் வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் வெகுவாக மேம்படும்.

Name Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்ககிட்ட ரகசியம் சொன்னா அவ்வளவுதான்.! ஊரு பூரா தம்பட்டம் அடிச்சிடுவாங்க.!

46
கன்னி

பாக்கிய மற்றும் லாப அதிபதிகளுக்கு இடையேயான சஞ்சாரத்தால், நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். சொத்துத் தகராறுகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பிரபலங்களின் தொடர்பு அதிகரிக்கும். மனதின் பெரும்பாலான ஆசைகள் நிறைவேறும். வருமானம் பிரம்மாண்டமாக உயரும். வேலை, திருமண முயற்சிகள் வெற்றி பெறும். வெளிநாட்டு வாய்ப்புகள் வர வாய்ப்புள்ளது.

Numerology: இந்த தேதிகள்ல பொறந்தவங்க வாழ்க்கையில பணத்துக்கு பஞ்சமே இருக்காதாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

56
விருச்சிகம்

ஏழாவது வீட்டில் சுக்கிரன் உடன் சந்திரன் சஞ்சரிப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் தொடர்பான நல்ல செய்திகள் வரும். வருமானம் பல வழிகளில் அதிகரிக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து, அந்நியோன்யம் கூடும். குழந்தை பாக்கியம் உண்டாக வாய்ப்புள்ளது. வெளிநாட்டுப் பயணங்களுக்கான பாதை சுலபமாகும். நிறைய நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.

Solar Eclipse 2026: இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல் அதிகரிக்கப் போகுது.!

66
மகரம்

5-ம் வீட்டில் உச்சம் பெற்ற சந்திரனுக்கும், 7-ம் வீட்டில் உள்ள சுக்கிரனுக்கும் இடையேயான சஞ்சாரத்தால், இந்த ராசிக்கு எதிர்பாராத சுப நிகழ்வுகள் நடக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வசதியான குடும்பத்தில் இருந்து வாழ்க்கைத்துணை அமையலாம். வருமானம் பல வழிகளில் பெருகும். தனிப்பட்ட, நிதி மற்றும் குடும்பப் பிரச்சனைகள் முழுமையாகத் தீரும். மனதின் ஆசைகள் நிறைவேறும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாகச் செல்லும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories