
New Year Rasi Palan Pariharam 2025 in Tamil: ஏசியாநெட் நியூஸ் தமிழ் சார்பில் அனைவருக்கும் தீபாவளி மற்றும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். புதன் கிழமை பிறக்கும் 2025 ஆங்கிலப் புத்தாண்டில் சனி, குரு, ராகு மற்றும் கேது பெயர்ச்சிகள் நிகழ போகிறது. இந்த பெயர்ச்சிகள் 12 ராசிகளுக்கும் ராஜ யோக பலன்கள் கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க..
மேஷம்:
2025 ஆங்கில புத்தாண்டு மேஷ ராசிக்கு கலவையான பலன்களை கொடுக்க போகிறது. திருமண வாழ்க்கை இனிமையாக இருந்தாலும், காதல் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. உடல்நலனிலும் பாதிப்பு ஏற்படக் கூடும்.
பரிகாரம்:
துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். வியாழக்கிமை தோறும் மஞ்சள் நிற லட்டுகளை பிரசாதமாக கொடுக்க வேண்டும். மேலும் சனிக்கிழமையில் பெருமாள் வழிபாட்டுடன் சுந்தரகாண்டம் பாராயணம் செய்ய வேண்டும்.
ரிஷப ராசியினருக்கு 2025 ஆம் ஆண்டு புத்தாண்டு
உழைப்பு ஏற்ப ஊதியம் கிடைக்கும். நிதி பிரச்சனை இருக்காது. ஆடம்பரம் இல்லாமல் அமைதியாக போகும். எல்லாமே நல்லதாக நடக்க, பசுவிற்கு உங்களால் முடிந்தளவில் பழம், கீரைகள் கொடுக்க வேண்டும். 4 மாதங்களுக்கு ஒரு முறை அதாவது சனி பெயர்ச்சி அல்லது குரு பெயர்ச்சி அல்லது ராகு கேது பெயர்ச்சி ஆகும் போது 400 கிராம் முதல் 4 கிலோ வரையில் கோவிலுக்கு சர்க்கரை தானமாக கொடுக்க வேண்டும்.
மிதுனம்:
2025 ஆம் ஆண்டு மிதுன ராசியினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். பண வரவு ஓரளவு சாதகமாக இருக்கும். பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்றால் வெள்ளி அணிய வேண்டும். முனிவர்கள், ரிஷிகள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
கடகம்:
செலவு அதிகரிக்கும் ஒரு வருடமாக இருக்கும். சிக்கனமாக இருக்க வேண்டும். வெளிநாட்டிற்கு சென்று வரும் யோகம் வரும். மகான்கள், குருக்களுக்கு சேவை செய்ய வேண்டும். நெற்றியில் குங்கமம் வைக்க வேண்டும்.
சிம்மம்:
2025 ஆம் ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்களை தரப்போகிறது. நல்ல பலன்கள் நடக்க வியாழக்கிழமை தோறும் பாதாம் பருப்பு தானமாக கொடுக்க வேண்டும். எப்போதும் நெற்றியில் குங்கமம் வைத்துக் கொள்ள வேண்டும். திருநீறும் பூசிக் கொள்ளலாம். இந்த இரண்டும் இல்லாமல் வெளியில் செல்ல கூடாது.
கன்னி:
சனிபகவான் பெயர்ச்சியால் பலவீனமான பலன் கிடைக்க போகிறது. நாள்தோறும் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். திருநீறு மற்றும் குங்குமம் நெற்றியில் வைக்க வேண்டும். பசுவிற்கு பழம், கீரைகள் வாங்கி கொடுக்க வேண்டும்.
துலாம்:
நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். இருந்தாலும் கண் திருஷ்டி ஏற்படாமலிருக்க முடியாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இறைச்சி, மது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். மாதந்தோறும் கோயிலுக்கு நெய் அல்லது உருளைக்கிழங்கை தானமாக கொடுக்கலாம்.
விருச்சிகம்:
நிதி பிரச்சனை இருக்காது. எனினும் வரவு தாமதமாக இருக்கும். சனிக்கிழமை தோறும் பெருமாள் வழிபாடு மேற்கொள்ள வேண்டும். வெள்ளி அணிந்து கொள்ள வேண்டும்.
தனுசு:
தனுசு ராசிக்கான புத்தாண்டு ராசி பலன்கள் 2025: பெரிதாக ஒன்றும் நடக்காது என்ற போதிலும் திருமணம் குறித்து பேச்சுவார்த்தை நடக்கும். வெள்ளி நகை அணிந்து கொள்ள வேண்டும். வியாழக்கிழை தோறும் குரு வழிபாடு மேற்கொள்ள வேண்டும். பசுவிற்கு பழம் வாங்கி கொடுக்க வேண்டும்.
மகரம்:
விடிவுகாலம் பிறக்கும். வேலையில் மாற்றம் உண்டாகும். கோயில் அர்ச்சகருக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை மஞ்சள் வஸ்திரம் வாங்கி கொடுக்க வேண்டும். நெற்றியில் எப்போதும் திருநீறு, குங்குமம் பூச வேண்டும்.
கும்பம்:
இந்த ஆண்டு உங்களுக்கு கலவையான பலன்களைத் தரக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். ஒருமண்டலம் காலணி அணியாமல் வெறும் காலுடன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். இந்த ஒரு மண்டலமும் அசைவம் கூடாது. வெள்ளி செயினோ, மோதிரமோ அணிந்து கொள்ள வேண்டும்.
மீனம்:
வெளிநாடு, வெளி மாநிலங்களில் வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். துர்கா தேவியை வழிபட வேண்டும். இறைச்சி, மது ஆகியவற்றிலிருந்து விலகி இருப்பது நல்லது. வியாழக்கிழமை குரு பகவானையும், சனிக்கிழமை சனி பகவானையும் வழிபட வேண்டும். சனிக்கிழமை தோறும் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.