மீன ராசிக்காரர்கள் தங்களின் கற்பனைத் திறனால் ஒரு சிறிய பிரச்சினையைக் கூட உலகப் மகா யுத்தமாகத் தங்கள் மனதில் உருவகப்படுத்திக் கொள்வார்கள். எதிர்காலத்தைப் பற்றிய பயமும், கடந்த கால ஏமாற்றங்களும் இவர்களை அதிகம் யோசிக்க வைக்கும். குருவை அதிபதியாகக் கொண்ட மீன ராசி, எல்லையற்ற சிந்தனைத் திறனைக் குறிக்கும்.
டிப்ஸ்: கற்பனையான பயங்களில் இருந்து விடுபட்டு, நிகழ்காலத்தில் (Present moment) வாழப் பழக வேண்டும். இசை கேட்பதும், ஏதேனும் ஒரு கலை சார்ந்த பொழுதுபோக்கில் ஈடுபடுவதும் இவர்களின் சிந்தனையைத் திசைதிருப்பும்.