Astrology: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புயல் வீசும்.! தலைவிதியே மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?

Published : Sep 25, 2025, 11:52 AM IST

October Month Rasi Palangal: அக்டோபர் மாதத்தில் நடக்க இருக்கும் கிரக பெயர்ச்சிகளால் சில ராசிக்காரர்கள் சோதனையான காலக் கட்டத்தை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
அக்டோபர் மாத ராசி பலன்கள்

ஜோதிடத்தின் படி அக்டோபர் மாதத்தில் பல கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்ற உள்ளன. அக்டோபரில் நடக்கும் கிரகங்களின் பெயர்ச்சிகள் அடிப்படையில் சூரியன், சுக்கிரன் ஆகிய இரண்டு முக்கிய கிரகங்கள் நீச்சமடைந்து பலவீனமாக சஞ்சரிக்க உள்ளன. குரு வக்ரமடைவதற்கு முன்பாக அதிசாரமாக கடக ராசியில் உச்சமடைகிறார். அக்டோபர் மாதத்தில் உருவாகும் ராஜயோகங்களால் சில ராசிகள் பலனடைவார்கள் என்றாலும், அக்டோபர் மாதமானது நான்கு ராசிகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
ரிஷபம்

அக்டோபர் மாதம் ரிஷப ராசிக்காரர்களுக்கு கடினமான காலத்தை ஏற்படுத்துகிறது. உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவுகள் ஏற்படலாம். குறிப்பாக பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல்கள் ஏற்படலாம். குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் நெருக்கடிகள் உண்டாகலாம். பொருளாதார ரீதியாகவும் ரிஷப ராசிக்காரர்கள் நிதி சிக்கல்களை எதிர்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். கடன் வாங்கும் சூழல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் மற்றும் பொருளாதார ரீதியாக ரிஷப ராசிக்காரர்கள் ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் கூட அக்டோபர் மாதம் தொழில், வேலை மற்றும் வணிக ரீதியாக எந்த பிரச்சனையும் இருக்காது.

35
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதம் சாதகமற்றதாக விளங்குகிறது. கிரகங்கள் துலாம் ராசிக்கு சாதகமற்ற வகையில் சஞ்சரிக்க உள்ளன. எனவே இந்த மாதம் முழுவதும் நிதானமாகவும், பொறுமையாகவும் அனைத்து விஷயங்களையும் கையாள வேண்டியது அவசியம். புதிய முயற்சிகள், புதிய திட்டங்கள் தொடங்குவதை தவிர்க்க வேண்டும். இந்த காலகட்டத்தில் வீண் விரயங்கள், செலவுகள் அதிகரிக்கலாம். குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. 

தொழில் ரீதியாகவும் இந்த மாதத்தில் பெரிய லாபத்தை எதிர்பார்க்க முடியாது. வேலை மற்றும் தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்கக் கூடாது. செய்து கொண்டிருக்கும் வேலையை விட வேண்டும் என்கிற எண்ணத்தை கைவிட வேண்டும். அவசரப்பட்டு வேலை மாறுதலுக்கு முயற்சி செய்யக் கூடாது.

45
மகரம்

அக்டோபர் மாதத்தில் நடக்க இருக்கும் கிரக பெயர்ச்சிகளால் மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். மகர ராசிக்கு பல தீங்கு விளைவிக்கும் மாற்றங்கள் நடக்கலாம். குறிப்பாக அக்டோபர் மாதத்தின் இரண்டாம் பகுதி மிகவும் மோசமானதாக இருக்கும். மகர ராசியைச் சேர்ந்த பெண்கள் நிம்மதியை இழந்து தவிக்கலாம். குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களால் அவமானத்தை சந்திக்க நேரிடலாம். 

உடல் நலனில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக மன அழுத்தத்தை அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வணிகத்தில் நிதி இழப்புகள், வாழ்க்கையில் சிக்கல்கள் ஆகியவற்றை சந்திக்க நேரிடும். எனவே மகர ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

55
கும்பம்

அக்டோபர் மாதம் கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக பின்னடைவுகளை சந்திப்பீர்கள். தாய் மற்றும் தந்தை வழி உறவுகளால் சங்கடங்கள் ஏற்படலாம். தொழிலில் இருப்பவர்கள் அக்டோபர் மாதத்தின் பிற்பகுதியில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலையில் அலட்சியமாக இருப்பவர்கள் பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். இந்த மாதம் வருமானம் சீராக இருந்தாலும் கூட திடீர் செலவுகள் அதிகரிக்கும். 

குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியம் காரணமாக மருத்துவ செலவுகள் கணிசமாக உயரும். உடன் பிறந்தவர்களுடன் சொத்து, பூர்வீக வீடு அல்லது பூர்வீக சொத்துக்கள் தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கு இடையே விரிசல்கள் ஏற்படலாம். எனவே வார்த்தைகளை பயன்படுத்தும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories