Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் சுத்தமா செட் ஆகாது.! எத்தனை பேரை லவ் பண்ணாலும் பிரேக்-அப் நடக்குமாம்.!

Published : May 18, 2026, 12:32 PM IST

Date Of Birth Numerology: சிலருக்கு லவ் லைஃப்ல நிம்மதியே இருக்காது. உறவு தொடங்குன வேகத்துல முடிஞ்சிடும். இதுக்கு உங்க பிறந்த தேதியும் ஒரு காரணமா இருக்கலாம்னு நியூமராலஜி சொல்லுது. அதுகுறித்து இங்கு பார்க்கலாம். 

PREV
16
Date Of Birth Numerology

சிலருக்கு காதல் வாழ்க்கை எப்போதுமே நிலையா இருக்காது. திரும்பத் திரும்ப பிரேக்-அப் ஆகிட்டே இருக்கும். பலரும் இதை தலையெழுத்துனு நினைப்பாங்க. ஆனா, நியூமராலஜி, அதாவது எண் கணித ஜோதிடத்தின்படி, ஒருத்தரோட பிறந்த தேதி அவங்க உறவுகளை பாதிக்கும்னு சொல்றாங்க. ஒருத்தரோட பிறந்த தேதி, அவங்களுடைய குணம், சிந்தனை, உணர்ச்சிப்பூர்வமான இயல்பு, உறவுகளை கையாளும் விதம்னு பல விஷயங்களை சொல்லும். சில குறிப்பிட்ட மூல எண்களைக் கொண்டவர்களுக்கு உறவுகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம்னு நியூமராலஜி சொல்லுது. அது என்னன்னு விரிவாகப் பார்க்கலாம்.

Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?

26
மூல எண்ணை எப்படி கணக்கிடுவது?

நியூமராலஜியில், பிறந்த தேதியில் உள்ள எண்களைக் கூட்டி மூல எண் கணக்கிடப்படுகிறது. உதாரணமா, ஒருத்தர் 1-லிருந்து 9-ஆம் தேதிக்குள் பிறந்தா, அந்த எண்தான் அவரோட மூல எண். ஒருவேளை 10-லிருந்து 31-ஆம் தேதிக்குள் பிறந்திருந்தா, அந்த இரண்டு எண்களையும் கூட்ட வேண்டும். வர்ற ஒற்றை இலக்க எண் தான் அவங்களோட மூல எண். உதாரணமா, ஒருத்தர் 15-ஆம் தேதி பிறந்திருந்தா, அவரோட மூல எண் 1+5 = 6 ஆக இருக்கும்.

Weekly Horoscope: மேஷம் முதல் மீனம் வரை.! இந்த 8 ராசிகளுக்கு கஷ்டம் எல்லாம் தீரப்போகுது.! 12 ராசிகளுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!

36
மூல எண் 5: சுதந்திரமான குணம் கொண்டவர்கள்!

மூல எண் 5 கொண்டவங்க, சுதந்திரமான குணம் கொண்டவங்களா இருப்பாங்க. இவங்களுக்கு சீக்கிரமே போர் அடிச்சிடும். உறவுகள்ல எப்பவும் ஒருவிதமான புதுமையும், உற்சாகமும் இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. இந்த காரணத்தினாலேயே, இவங்களோட உறவுகள்ல ஒரு நிலைத்தன்மை இல்லாம போகலாம். இதனால, இவங்களுக்கு அடிக்கடி பிரேக்-அப் ஆக வாய்ப்பிருக்கு.

Gajakesari Yoga 2026: நேரடியாக விழும் குரு பார்வை.! கஜகேசரி ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு இனி ஏறுமுகம் தான்.!

46
மூல எண் 7: ரொம்ப எமோஷனல் பார்ட்டிங்க!

மூல எண் 7 கொண்டவங்க ரொம்ப உணர்ச்சி வசப்படக்கூடியவங்களாகவும், அதிகம் சிந்திக்கிறவங்களாகவும் இருப்பாங்க. சின்ன சின்ன விஷயங்களைக் கூட மனசுல போட்டு குழப்பிக்குவாங்க. பல நேரங்கள்ல, இவங்களோட ஓவர் திங்கிங்கே உறவுல விரிசலை உண்டாக்கிடும். இவங்க தங்களோட பார்ட்னர் மேல ரொம்ப பொசசிவ்வாவும் இருப்பாங்க. இந்த குணம் அவங்க பார்ட்னருக்கு பிடிக்காம போய், உறவு முறியற நிலைமைக்கு வந்துடும்.

56
மூல எண் 8: உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்கலாம்

எண் கணித ஜோதிடத்துல, மூல எண் 8 சனி பகவானுடன் தொடர்புடையதா பார்க்கப்படுது. இவங்களுக்கு தங்களோட பார்ட்னர்கிட்ட இருந்து போதுமான உணர்ச்சிப்பூர்வமான இணைப்பு கிடைக்கலைனா, உறவு பலவீனமாகிடும். இவங்க உறவுகளை ரொம்ப சீரியஸா எடுத்துக்குவாங்க. ஆனாலும், காதலில் தாமதம், தப்பா புரிஞ்சுக்கிறது, அல்லது அடிக்கடி ஹார்ட் பிரேக் போன்ற சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம்.

66
Disclaimer

இந்தக் கட்டுரையில கொடுக்கப்பட்ட தகவல்கள் எல்லாம், ஆன்மிக நூல்கள், அறிஞர்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்டவை. இந்தத் தகவல்களை வாசகர்களுக்கு கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்களுடைய நோக்கம். வாசகர்கள் இதை ஒரு தகவலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

Read more Photos on
click me!

Recommended Stories