Numerology: எண் கணிதத்தின்படி, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மார்ச் மாதம் பணக்காரர் ஆவார்கள்.!

Published : Feb 27, 2026, 04:59 PM IST

Numerology Predictions March : எண் கணித சாஸ்திரப்படி, 2026 மார்ச் மாதம் சில குறிப்பிட்ட ராசி எண் கொண்டவர்களுக்கு மிகச் சிறந்த மாதமாக இருக்கும். பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். 

PREV
14
எண் 1

எந்த மாதத்திலும் 1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராசி எண் 1-ஐக் கொண்டவர்கள். இவர்களை சூரியன் ஆள்கிறார். இவர்கள் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்பார்கள். மார்ச் 2026 இவர்களுக்கு சாதகமான மாதமாக இருக்கும். நிதி நிலைமை கணிசமாக வலுப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புதிய வருமான வழிகள் திறக்கும்.

24
எண் 2

எந்த மாதத்திலும் 2, 11, 20 அல்லது 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராசி எண் 2-ஐக் கொண்டவர்கள். இவர்களை சந்திரன் ஆள்கிறார். இவர்களுக்கு மார்ச் 2026 இவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கடின உழைப்பு வெற்றி தரும். பழைய முதலீடுகள் லாபம் தரும். புதிய வேலை வாய்ப்பு வரலாம். வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு புதிய வேலை கிடைக்கலாம்.

34
எண் 3

எந்த மாதத்திலும் 3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராசி எண் 3-ஐக் கொண்டவர்கள். இவர்களை குரு பகவான் ஆள்கிறார். இவர்கள் புத்திசாலிகளாகவும், ஆன்மீகவாதிகளாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மார்ச் 2026-ல் இவர்களுக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும். நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். நண்பர்கள் ஆதரவளிப்பார்கள்.

44
எண் 9

எந்த மாதத்திலும் 9, 18 அல்லது 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராசி எண் 9-ஐக் கொண்டவர்கள். இவர்களை செவ்வாய் பகவான் ஆள்கிறார். இவர்கள் தைரியமானவர்கள் மற்றும் ஆற்றல் மிக்கவர்கள். மார்ச் 2026-ல் அதிர்ஷ்டம் வரும். புதிய தொழில் தொடங்கலாம். முதலீடு லாபம் தரும். வேலையில் பதவி உயர்வு ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்க்கலாம். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories