சிம்ம ராசி நேயர்களே, மாதத்தின் பெரும்பகுதி சூரியன் உங்கள் நான்காம் வீட்டில் இருப்பது சராசரி பலன்களைத் தரும். மதத்தின் இறுதியில் புதன் ஐந்தாம் வீட்டிற்கு செல்வது ஓரளவு பலன்களைத் தரும். குரு பனிரெண்டாம் வீட்டில் இருப்பது சராசரி முடிவுகளைத் தரும். சுக்கிரன் ஏழாம் வீட்டில் இருப்பதால் சுப பலன்கள் கிடைக்கலாம்.
இந்த வாரம் சராசரி பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கவனமாக செயல்பட்டால் முடிவுகள் சிறப்பாக இருக்கும். மனதில் சோர்வு, குழப்பம் நிலவக்கூடும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் நிதானம் தேவை. பூர்வீக சொத்து, வீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலவையான முடிவுகள் காணப்படும்.
நிதி நிலைமை:
எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். நிதி விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். வருமானத்தில் ஸ்திரமான நிலை இருந்தாலும், செலவுகளை சமாளிக்க சேமிப்புகளை பயன்படுத்த நேரிடும். இந்த காலகட்டத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. சிறு சேமிப்புகளில் கவனம் செலுத்தவும்.
ஆரோக்கியம்:
சிறு சிறு உடல் நலக் கோளாறுகள் வந்து நீங்கும். குறிப்பாக செரிமானம் மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். வாகனம் ஓட்டும் போதும், பயணங்களின் போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மன அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்லது.
கல்வி:
மாணவர்களுக்கு கடின உழைப்பு தேவைப்படும். சராசரியை விட குறைவான முடிவுகளே கிடைக்கலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் தங்கள் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும். வெற்றிக்கு விடாமுயற்சி அவசியம்.
தொழில் மற்றும் வியாபாரம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று சிரமம், எதிர்பாராத இடமாற்றம் அல்லது வேலை மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நிதானமான போக்கு காணப்படும். போட்டிகள் வந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திடும் போது கூடுதல் கவனம் தேவை. பதவி உயர்வு, அல்லது ஊதிய உயர்வு ஆகிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம்.
குடும்ப உறவுகள்:
திருமண வாழ்வில் சிறு சிறு சச்சரவுகள் ஏற்படு வாய்ப்பு உள்ளது. நிதானமாகவும் விட்டுக் கொடுத்தும் செல்வது அவசியம். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படலாம். பூர்வீக சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் சாதகமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் சமூக வட்டத்தில் உங்கள் மதிப்பு சீராக இருக்கும்.
பரிகாரம்:
ஏழைகளுக்கு கோதுமை அல்லது வெல்லம் தானம் செய்வது நன்மையை அதிகரிக்கும். பெரியவர்களை மதித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவது சாதகமான பலன்களை அதிகரிக்கும். காமாட்சி அம்மன் அல்லது மீனாட்சி அம்மன் வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது சிம்ம ராசிக்கு மிகவும் நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)