கடக ராசி நேயர்களே, குரு பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற்று வக்ர நிலையில் இருப்பது சிறப்பான ராஜயோக அமைப்பாகும். நவம்பர் 26ஆம் தேதிக்கு மேல் சூரியன், செவ்வாய், சுக்கரனின் சேர்க்கை நடைபெறுவது சிறந்த யோகமாக கருதப்படுகிறது.
ராசிநாதன் சந்திரன் இருக்கும் கடகத்தில் உச்சம் பெற்ற குருவின் பார்வை மற்றும் பலத்தால் நீச்பங்க ராஜயோகம், லட்சுமி நாராயண யோகம் உருவாவது சாதகமான பலன்களை அளிக்கும். இந்த வாரம் உங்களுக்கு மகிழ்ச்சியும், நல்ல அதிர்ஷ்டமும், வசதி வாய்ப்புகளும் அதிகரிக்க கூடிய வாரமாக இருக்கும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் நிதி சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் விலகி, நினைத்த காரியங்களில் வெற்றி காண்பீர்கள். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. பொருளாகாரத்தில் இருந்த சிக்கல்கள் விலகும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
சேமிப்பை அதிகரிக்கும் முதலீடுகளில் கவனம் செலுத்தலாம். வீடு, நிலம், வாகனம், ஆபரணம் போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் பலன்களைத் தரும். முதலீடுகள் அல்லது தொழில் ரீதியான பயணங்கள் லாபகரமானதாக அமையும்.
ஆரோக்கியம்:
குருவின் பலத்தால் மனதில் நல்ல தெளிவும், நேர்மறை சிந்தனைகளும் உண்டாகும். மன அழுத்தம் குறையும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஐந்தாம் வீட்டில் சில கிரக சேர்க்கைகள் காரணமாக வயிறு சார்ந்த விஷயங்களை கவனம் தேவை. சனி பகவானின் நிலை காரணமாக தேவையற்ற அலைச்சலை குறைத்து, உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவது ஆரோக்கியத்தை பேண உதவும்.
கல்வி:
இது மாணவர்களுக்கு மிகவும் சாதகமான நேரமாக இருக்கும். கல்வியில் சிறப்பான வெற்றிகளைப் பெறுவீர்கள். நீங்கள் திட்டமிட்டபடி உயர் கல்வியில் சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகள் வெற்றிடையும். கலை மற்றும் விளையாட்டுத் துறையில் மாணவர்கள் பிரகாசிப்பார்கள்.
தொழில் மற்றும் வியாபாரம்:
தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். நிதி ஆதாயம் உருவாகும். மேல் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுக்களும், பரிசுகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடு, வெளியூர், வெளி மாநிலம் வேலைகளுக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தையும், வருமானத்தையும், முன்னேற்றத்தையும் காண்பீர்கள். கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் விலகி லாபம் அதிகரிக்கும். அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் ஏற்றத்தைக் காண்பீர்கள்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமணத் தடைகள் விலகும். திருமணத்திற்கான முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணையுடன் அன்னோனியமும், புரிதலும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியவர்களின் ஆதரவு கிடைக்கும்.
பெற்றவர்கள் மற்றும் தாய் வழி சொந்தங்கள் மூலமாக ஆதாயம் அடைவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. குலதெய்வத்தின் பரிபூரண அருள் இருப்பதால் குடும்பத்தில் அதிர்ஷ்டம் உண்டாகும்.
பரிகாரம்:
இந்த வாரம் குலதெய்வ வழிபாடு செய்வது மிகுந்த நன்மை தரும். வீட்டில் கன்னி தெய்வம் இருந்தால் கன்னி தெய்வ வழிபாடு செய்வதும் பலன்களை அதிகரிக்கும். சீரடி சாய்பாபாவை வழிபடுவது நல்லது. இயலாதவர்களுக்கு தானங்கள், சேவைகள் அதிக அளவில் செய்வது குருவின் அருளை பன்மடங்கு அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)