மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் சூரிய பகவான் சஞ்சராத்தால் வேலை, ஆரோக்கியம், போட்டி ஆகியவற்றில் கவனம் அதிகரிக்கும். செவ்வாய் பகவானின் நிலை காரணமாக அதிக ஆற்றல் கிடைக்கும். போட்டியில் வெற்றி கடமைகளை முடிப்பதற்கான உத்வேகம் கிடைக்கும்.
புதன் பகவானின் சாதகமான நிலை காரணமாக அறிவாற்றல், புத்தி கூர்மை, தகவல் தொடர்பில் தெளிவு கிடைக்கும். சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைவது தொழில் மற்றும் உத்தியோகத்தில் ஸ்திரத்தன்மையைக் கொடுக்கும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமை இந்த வாரம் சீராக இருக்கும். குருவின் பார்வையால் சேமிப்புத் திறன் மேம்படும். வரவு செலவு திட்டத்தை மறுபரிசீலனை செய்து தேவையற்ற செலவுகளை குறைக்க இது சிறந்த நேரமாகும்.
எதிர்பாராத வருமானங்கள் அல்லது நிலுவையில் இருந்த தொகைகள் கைக்கு வந்து சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது. அறிவுத் திறன் மேம்பாடு அல்லது வேலைக்குத் தேவையான கருவிகள், பொருட்கள், வாகனம் வாங்குவதில் முதலீடு செய்வீர்கள்.
ஆரோக்கியம்:
இந்த வாரம் அதிக வேலைப்பளு ஏற்படும் என்பதால் உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கவனத்துடன் இருக்க வேண்டும். திரையில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
நரம்பு தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். மனதுக்கும், உடலுக்கும் இடையே சமநிலையை பேண வேண்டியது அவசியம். மூச்சுப் பயிற்சிகள் மற்றும் உடற்பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
கல்வி:
புதன் பகவானின் அனுகூலம் காரணமாக கல்வியில் புதிய தெளிவும், கூர்மையும் உண்டாகும். ஒரே ஒரு நேரத்தில் பல விஷயங்களில் கவனம் செலுத்துவதை தவிர்த்து, படிப்பில் ஒரு எளிய திட்டத்தை அமைத்துக் கொள்வது வெற்றி பெற உதவும்.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும், அங்கீகாரமும் கிடைக்கும். குழு பணிகள் மற்றும் விவாதங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
இந்த வாரம் வேலையில் கவனம், செயல்திறன் மற்றும் நம்பிக்கை ஆகியவை அதிகரிக்கும். நிலுவையில் உள்ள வேலைகளை முடிக்கவும் புதிய திட்டங்களை வகுக்கவும் சிறந்த வாரமாகும். வாரத்தின் பிற்பகுதியில் வேலை இடத்தில் சாதகமான சூழலை எதிர்பார்க்கலாம்.
வணிக முயற்சிகளுக்கு கலவையான முடிவுகள் கிடைக்கும். சிந்தித்து செயல்பட்டால் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். நவம்பர் 28-ல் சனி வக்ர நிவர்த்தி அடைவதால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும்.
குடும்ப உறவுகள்:
புதன் பகவானின் சாதகமான நிலை காரணமாக வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையான உரையாடல்கள் நிகழும். நிலுவையில் இருந்த சிக்கல்களை தீர்த்து புரிதலுடன் செயல்படுவீர்கள்.
சுக்ர பகவானின் அனுகூலத்தால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் அல்லது காதல் வாய்ப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. பெற்றோர்கள் அல்லது பெரியவர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே வார்த்தைகளில் நிதானம் தேவை.
பரிகாரம்:
அதிகாலையில் எழுந்து குளித்து, முடித்து சூரிய பகவானுக்கு நீர் அர்ப்பணித்து வழிபடுவது நல்லது. சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் எண்ணெய் தீபமேற்றி வழிபட உத்தியோகத்தில் இருக்கும் தடைகள் நீங்கும். கல்வி மேம்பட புதன்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள். சந்திராஷ்டம தினங்களில் அமைதி காப்பது, புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)