Astrology: பாதையை மாற்றும் குரு பகவான்.! 2026 முதல் இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கப் போகுது.!

Published : Nov 23, 2025, 12:35 PM IST

Guru Peyarchi 2026 tamil: 2026 ஆம் ஆண்டு குரு பகவான் தனது இயக்கத்தை மாற்ற இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
குரு பெயர்ச்சி 2026 ராசி பலன்கள்

ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவரின் இயக்கத்தில் ஒவ்வொரு முறையும் மாற்றம் ஏற்படும்பொழுது அது மனிதர்களின் வாழ்க்கையில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குரு பகவான் ஞானம், கல்வி, மகிழ்ச்சி, சுப காரியங்களுக்கு காரகராக விளங்குகிறார். நவம்பர் 11, 2025 கடக ராசியில் உச்சம் பெற்ற நிலையில் வக்ர நிலையில் (பின்னோக்கிய நிலையில்) பயணித்து வருகிறார். இந்த பயணமானது மார்ச் 11, 2026 வரை நீடிக்க இருக்கிறது.

26
நேரடி நிலைக்கு மாறும் குரு பகவான்

மார்ச் 11, 2026 அன்று வக்ர நிலையில் இருந்து மாறி தனது நேரடி பயணத்தை தொடங்குகிறார். குரு பகவான் வக்ர நிலையில் இருந்து நேரடி பயணத்துக்கு மாறுவது பல ராசிகளுக்கு நன்மைகளை தரும் ஒரு முக்கிய ஜோதிட நிகழ்வாக கருதப்படுகிறது. குரு பகவான் நேர் கதியில் செல்லும் பொழுது அவர் ஆசீர்வாதங்கள் முழுமையாக கிடைத்து வாழ்வில் வளர்ச்சி, செழிப்பு, நேர்மறை மாற்றங்கள் அதிகரிக்கும். தடைபட்டிருந்த முயற்சிகள், தொழில்கள், வேலை தேடுதல் இனி வேகம் பெறும். நிதி நிலைமை மேம்படும். பணவரத்துக்கான புதிய வழிகள் திறக்கப்படும்.

மார்ச் 2026 இல் குரு பகவான் நேரடி பயணத்திற்கு மாறுவதால் பல ராசிகள் நன்மை அடைந்தாலும், குறிப்பிட்ட சில ராசிகள் கூடுதல் பலன்களை அனுபவிக்க வாய்ப்பு உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

36
மிதுனம்
  • மிதுன ராசிக்காரர்களின் இரண்டாம் வீடான தன ஸ்தானத்திற்கு குரு பகவான் நேரடி நிலையில் வருகிறார். இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களின் பணப்புழக்கம் அபரிமிதமாக அதிகரிக்கும். 
  • பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை உயரும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சேரும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். 
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அளவில்லாமல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த சண்டைகள், மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். 
  • நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொழில் மற்றும் சமூகத்தில் உங்களின் ஆலோசனைகள் ஏற்கப்படும். 
  • வீட்டில் சுப காரியங்கள் குறிப்பாக, திருமணம் போன்ற பேச்சு வார்த்தைகளில் வெற்றி கிடைக்கும்.
46
ரிஷபம்
  • ரிஷப ராசிக்காரர்களின் மூன்றாம் வீடான சகோதரர், வீரம், முயற்சி ஸ்தானம் இடத்திற்கு குரு பகவான் நேரடி நிலைக்கு வருவதால் ரிஷப ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையைப் பெறுவீர்கள். 
  • உங்கள் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு நின்று போன காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் தைரியமான முடிவுகள் லாபத்தைத் தரும். 
  • சகோதரர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு அதிகரிக்கும். அவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். 
  • தொழில் ரீதியாக செல்லும் பயணங்களின் மூலம் வெற்றி உண்டாகும். உங்கள் தனிப்பட்ட ஆர்வங்கள் மற்றும் திறமைகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
56
கன்னி
  • குரு பகவான் கன்னி ராசியின் 11-வது வீடான லாப ஸ்தானத்தில் நேரடி நிலைக்கு வர இருக்கிறார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் லாபத்தைப் பெறுவீர்கள். 
  • தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். 
  • நீண்ட நாட்களாக நிறைவேறாமல் இருந்து வந்த கனவுகள் மற்றும் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். 
  • நண்பர்கள், மூத்த சகோதரர்கள் மற்றும் முழு அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். முன்னர் செய்திருந்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். 
  • 2026 மார்ச் தொடங்கி அடுத்த சில மாதங்கள் லாபம் ஈட்டும் காலமாக மாறும்.
66
மகரம்
  • மகர ராசிக்கு ஏழாம் வீட்டில் குரு பகவான் நேரடி நிலைக்கு வருகிறார். இந்த வீடானது கணவன் மனைவி, கூட்டாளி, தொழில் பங்குதாரர் ஆகியோரை குறிக்கும் ஸ்தானமாகும். 
  • இதன் காரணமாக திருமணம் மற்றும் தொழில் உறவுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் ஆகாமல் தடை ஏற்பட்டு வந்தவர்கள் அந்த தடைகள் அனைத்தும் நீங்கி நல்ல இடத்தில் வரன் அமையும். 
  • கணவன் மனைவிக்கிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். தொழிலில் நம்பிக்கையான கூட்டாளிகள் கிடைப்பார்கள். இதன் காரணமாக ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். 
  • எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும். உடல் நலக் கோளாறுகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories