மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியின் அதிபதி செவ்வாயின் நிலையால் ஆரம்பத்தில் சவால்கள் இருந்தாலும் வாரம் செல்ல செல்ல புத்துணர்ச்சியும் புதிய உற்சாகமும் பிறக்கும்.
இந்த வாரம் தேவையற்ற சுமைகள், பழைய கவலைகள் மற்றும் கவனச்சிதறல்களை அகற்றி வெற்றியை ஈட்டுவீர்கள். நீங்கள் திட்டமிட்டு செய்யும் வேலைகள் நல்லபடியாக முடியும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். சமூகம் அல்லது பணியிடத்தில் மரியாதை கூடும்.
நிதி நிலைமை:
புதன் சுக்கிரன் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் எதிர்பாராத நிதி நன்மைகளை அதிகரிக்கும். திடீர் செலவுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் வீண் செலவுகளை தவிர்க்கவும். நிதி விஷயங்களில் ஒழுக்கம் தேவை.
வார இறுதியில் புதிய வருமானத்திற்கான வழி கிடைக்க வாய்ப்பு உள்ளது. பழைய கடன்கள் அல்லது நிலுவைத் தொகைகளை தீர்ப்பதன் மூலம் நிதி நிவாரணம் கிடைக்கும். நீண்ட கால திட்டமிடுகளுக்கு சாதகமான வாரமாகும்.
ஆரோக்கியம்:
வாரத்தின் தொடக்கத்தில் ஏற்படும் மனச்சோர்வு விலகி வாரத்தின் பிற்பகுதியில் உடல் ஆரோக்கியம் மேம்படும். அதிகப்படியான வேலை அல்லது கவனச்சிதறல்கள் காரணமாக ஏற்படும் அலைச்சல் மற்றும் அதன் காரணமாக வரும் உடல் வலி குறித்து கவனமாக இருக்க வேண்டும். உடல் மற்றும் உணர்ச்சி ரீதியான நச்சுத்தன்மை அகற்ற தூக்கம், நீரேற்றம் தியானம் ஆகியவற்றை செய்வது நன்மை பயக்கும்.
கல்வி:
மாணவர்கள் தங்கள் படிப்பில் மெத்தனப் போக்கை கைவிட வேண்டியது அவசியம். மெத்தனம் காட்டுபவர்களுக்கு அதிக முயற்சி தேவைப்படலாம். வெளிநாட்டு பயணங்கள் அல்லது உயர் கல்விக்கான முயற்சிகள் குறித்து வாரத்தின் பிற்பகுதியில் தெளிவு கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
இந்த வாரம் தொழிலில் புதிய தெளிவு உண்டாகும். உங்களின் தலைமைப் பண்பு வலுப்பெறும். செல்வாக்கு மிக்க ஒருவரால் ஆற்றல் அதிகரிக்கும். இந்த வார இறுதியில் ஒரு பெரிய பொறுப்புக்கள் அல்லது புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.
சனி பகவான் நேரடி இயக்கத்தை தொடங்குவதால் நீண்ட கால தொழில் இலக்குகள் மற்றும் கடமைகள் இலகுவாகி அவற்றை அடைவதற்கான வேகம் அதிகரிக்கும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும்.
குடும்ப உறவுகள்:
கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். உணர்ச்சிபூர்வமான பிணைப்புகள் ஏற்படும். வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதால் உறவுகள் பலப்படும். காதல் வாழ்க்கை சிறப்பானதாக அமையும்.
வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் சுயமரியாதையை குறைக்கும் பழைய உறவுகளை விடுவிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம்.
பரிகாரம்:
ஆதிபராசக்தி அன்னையை வணங்குவது நன்மை அளிக்கும். சிவலிங்கத்திற்கு பால் மற்றும் நீர் சமர்ப்பித்து வழிபடுவது மன அமைதி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு உதவும். அருகில் உள்ள ராகவேந்திரர் ஆலயங்களுக்கு செல்வது நற்பலன்களைக் கூட்டும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் அல்லது உடைதானம் அளிப்பது மிகுந்த சிறப்புகளைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)