Budh Shukra Conjunction 2025: நவம்பர் 23, 2025 துலாம் ராசியில் சுக்கிரன் மற்றும் புதனின் சிறப்பு சேர்க்கை நடைபெற உள்ளது. இது சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தரும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தின்படி ஒன்பது கிரகங்களும் அவ்வப்போது பெயர்ச்சியாகி சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த யோகத்தின் விளைவுகள் மனித வாழ்க்கையில் எதிரொலிக்கின்றன. பஞ்சாங்கத்தின்படி நவம்பர் 23 ஆம் தேதி துலாம் ராசியில் புதன் மற்றும் சுக்கிரனின் சிறப்பு சேர்க்கை நடைபெற உள்ளது. இது லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்க இருக்கிறது. இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும். புதிய வேலை வாய்ப்புகளுடன், நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
24
துலாம்
சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கை துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த சேர்க்கை உங்கள் ராசியின் லக்ன வீட்டில் உருவாகிறது.
இந்த நேரத்தில் உங்கள் ஆளுமைத் திறன் மேம்படும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். குழப்பமான முடிவுகளில் இருந்து விடுபட்டு துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள்.
வணிகம் மற்றும் வேலைவாய்ப்பில் லாபம் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு புதிய வருமானத்திற்கான கதவுகளை திறக்கும். மாணவர்கள் முன்பை விட படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய வீடு, மனை மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
34
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் புதன் சேர்க்கை பல வழிகளில் நன்மை பயக்கும். இந்த சேர்க்கை உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் நிகழ இருக்கிறது.
எனவே இந்த காலக்கட்டத்தில் நீங்கள் வசதிகளையும், ஆடம்பரங்களையும் அனுபவிப்பீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு நிறைந்த சூழல் உருவாகும்.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து ஆதரவு கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். தொழிலில் புதிய யோசனைகளை செயல்படுத்தி லாபத்தை ஈட்டுவீர்கள். மாமனார் மற்றும் மாமியார் வழி உடனான உறவு மேம்படும்.
மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் புதன் இணைவு பத்தாம் வீடான கர்ம ஸ்தானத்தில் நடைபெறுகிறது. எனவே அவர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
தொழிலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் புதிய உச்சங்களையும் தொடுவீர்கள். வேலை செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கண்டுபிடித்து வேலை மாறுதல் பெறுவீர்கள்.
வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். லாபத்திற்கான வழிகள் திறக்கப்படும்.
வணிகர்கள் குறிப்பிடத்தக்க நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். வணிகத்தை விரிவு செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)