ரிஷப ராசி நேயர்களே, புதன் பகவான் நவம்பர் 23 பிறகு சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் பேச்சுவார்த்தை மற்றும் தொழில் ஒப்பந்தங்களில் முன்னேற்றம் கிடைக்கும். குரு பகவான் வக்ர நிலையில் இருப்பது சராசரியான பலன்களை தரக்கூடும். சனி பகவான் நவம்பர் 28ல் வக்ர நிவர்த்தி அடைவது லாபம் மற்றும் நீண்ட கால இலக்குகளில் இருந்து வந்த தடைகளை நீக்க உதவும்.
நிதி நிலைமை:
பெரும்பாலான கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக கலவையான பலன்கள் கிடைக்கக்கூடும். பண வரவு நன்றாக இருக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதே சமயம் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பட்ஜெட்டை திட்டமிட்டு செய்ய வேண்டியது அவசியம்.
பெரிய முதலீடுகளை தள்ளிப் போடுவது அல்லது நிதானமாக இருப்பது நல்லது. சுக்கிரனின் நிலைப்பாடு காரணமாக கடன் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
ஆரோக்கியம்:
இன்று சுறுசுறுப்புடன் செயல்பட நினைத்தாலும் உடல் நலனில் கவனத்துடன் இருங்கள். சோர்வு அல்லது சிறிய உபாதைகள் வந்து நீங்கும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் மனச்சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு பயணங்களால் அலைச்சலும், அதனால் களைப்பும் ஏற்படலாம். எனவே போதுமான ஓய்வு அவசியம்.
கல்வி:
மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் தேவைப்படும். லட்சியங்களை அடைய தீவிரம் முயற்சி எடுக்க நேரிடலாம். கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நேர்மறையான முடிவுகளை எதிர்பார்க்கலாம். ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி பயில்வோர்க்கு சாதகமான வாரமாக அமையும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் திறமையுடன் வேலைகளை செய்து முடிப்பீர்கள். மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். உங்கள் அர்ப்பணிப்பு பாராட்டப்படும். உத்தியோகத்தில் மாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு அல்லது புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான செய்திகள் கிடைக்கும். கூட்டுத் தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் பேச்சுவார்த்தையில் நிதானம் காப்பது அவசியம். ஒப்பந்தங்களில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்திருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஈகோ காரணமாக சண்டைகள் அல்லது கருத்து வேறுபாடுகள் வந்து நீங்க வாய்ப்பு உள்ளது. எனவே பேச்சில் நிதானம் தேவை. கருத்து வேறுபாடுகளுடன் இருந்த உறவினர்கள் மீண்டும் சுபகாரியங்கள் மூலம் இணைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். புதிய திட்டங்களை பற்றி விவாதிக்க நல்ல நேரமாகும்.
பரிகாரம்:
மன அழுத்தத்தை குறைக்க தியானம் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மன் அல்லது மகாலட்சுமிக்கு விளக்கேற்றி வழிபடலாம். முதியவர்கள் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு உடைதானம் வழங்குவது அல்லது அன்னதானம் வழங்குவது நேர்மறை பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)