துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் மன வலிமை கொண்டு கடினமான பணிகளை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். உங்களின் தனித்துவமான செயல்பாடுகள் வெற்றியையும் உற்சாகத்தையும் தரக்கூடும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். செல்வாக்கு மிக்க நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சில நல்ல நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எதிர்மறையான சிந்தனைகள் மற்றும் நபர்களை தவிர்த்து உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள்.
நிதி நிலைமை:
இந்த வாரம் தேவையற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தின் மூலம் பணவரவு சாதகமாக இருக்கும். நீண்ட கால முதலீடுகள் மற்றும் வியாபாரம் சார்ந்த புதிய முயற்சிகளுக்கு நல்ல சூழலாகும். உங்கள் நிதி நிலைமையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். இல்லையெனில் கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டு மன அழுத்தம் அதிகரிக்கலாம்.
கல்வி & ஆரோக்கியம்:
மாணவர்களின் கடின உழைப்புக்கான வெகுமதி கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்கும். உயர்கல்வி பெறுவதற்கான நிதி உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஆரோக்கியம் பொதுவாக மேம்படும். வாட்டி வதைத்து வந்த கோளாறுகள் நீங்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். இருப்பினும் சிலருக்கு வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கலாம். கை, கால்களில் அசதி ஏற்படும் என்பதால் போதுமான ஓய்வு தேவை. ஆயுதங்கள், இயந்திரங்கள், நெருப்பை கையாளும் தொழிலாளர்கள் கவனமாக இருக்கவும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
வேலையிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு அல்லது நீங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கலாம். பணிச்சுமைகள் நீங்கி நன்மை கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பதால் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் பங்குச் சந்தை முதலீடுகள் ஆதாயம் தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. நிர்வாகம் பற்றி யாரிடமும் விமர்சனம் செய்யாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம்.
குடும்ப உறவுகள்:
கணவன் மனைவி இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன்களைத் தரும். நீங்கள் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் சில சமயங்களில் டென்ஷன் தருவதாக இருக்கலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களை விட்டு பிடிப்பது உறவை மேம்படுத்தும். குடும்பத்திற்கு உங்கள் காதல் துணையை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு உகந்த மந்திரங்களை கூறி வழிபடலாம். ஓம் சுக்ராய நமஹ மந்திரத்தை உச்சரிப்பது செழிப்பை தரும். மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர்கள் சாற்றி வழிபடலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுவது, குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்குவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)