Astrology: 164 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவான லாப திருஷ்டி யோகம்.! லட்சாதிபதியாக மாறப்போகும் ராசிகள்.!

Published : Dec 03, 2025, 11:51 AM IST

Labh Drishti Yog Lucky Zodiac signs: டிசம்பர் மாதம் நெப்டியூன் மற்றும் சுக்கிரன் இருவரும் இணைந்து உருவாக்கிய ‘லாப திருஷ்டி யோகம்’ குறித்தும், அதனால் பலன்பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
14
லாப திருஷ்டி யோகம் 2025

பொதுவாக ஒரு கிரகத்தின் பெயர்ச்சி, இரண்டு கிரகங்களின் சேர்க்கை அல்லது இரண்டு கிரகங்கள் ஒருவருக்கொருவர் பார்வையிடுவது (திருஷ்டி) ஆகியவற்றால் ஜோதிடத்தில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் டிசம்பர் 2, 2025 அன்று நெப்டியூன் மற்றும் சுக்கிரன் இருவரும் ஒன்றிணைந்தன் அதன் காரணமாக ‘லாப திருஷ்டி யோகம்’ உருவாகியுள்ளது.

நெப்டியூன் மீன ராசியிலும், சுக்கிரன் விருச்சிக ராசியிலும் சஞ்சரித்துள்ளனர். நெப்டியூன் கிரகமானது ஒரு ராசியில் 13 ஆண்டுகள் வரை இருக்கும். எனவே ஒரு சுழற்சியை முடிக்க 164 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும். அந்த வகையில் தற்போது 164 ஆண்டுகளுக்கு பின்னர் நெப்டியூன் சுக்கிரன் இணைந்து லாப திஷ்டி யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகம் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

லாபம் என்ற சொல்லுக்கு ஏற்ற வகையில் இந்த யோகம் நிதி ஆதாயம், எதிர்பாராத பண வரவு, வருமானத்தில் திடீர் அதிகரிப்பு மற்றும் பொருளாதார நிலை மேம்பாடு போன்ற சுப பலன்களை அளிக்கும் யோகமாக கருதப்படுகிறது. லாப திருஷ்டி யோகத்தால் பலன்பெறும் மூன்று ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

24
மேஷம்

லாப திருஷ்டி யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அளவில்லாத நன்மைகள் கிடைக்கக்கூடும். இந்த ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயங்கள் அதிகரிக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில், நிறைவான ஊதியத்தில் வேலை கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு கூடும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். தொழில் செய்து வருபவர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகள் மூலம் கணிசமான பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, நல்லிணக்கம் ஏற்படும்.

34
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் காரணமாக பணவரவு சிறப்பாக இருக்கும். மீள முடியாமல் இருந்த கடன் பிரச்சனைகள் நீங்கி, மனதில் அமைதி உண்டாகும் திருமணமாகாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல வரன் அமைந்து விரைவில் திருமணம் கைகூடும். உங்கள் கடின உழைப்புக்குரிய பலன்கள் கிடைக்கும். சொத்து பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தகராறுகள் தீர்க்கப்பட்டு சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம் அல்லது சொத்துக்களின் மூலம் கணிசமான தொகை உங்கள் வாரிசுகளுக்கு கிடைக்கலாம். உங்கள் பேச்சால் மற்றவர்களை கவர்ந்து காரியத்தை சாதிப்பீர்கள்.

44
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு லாப திருஷ்டி யோகம் மிகவும் நன்மைகளைத் தரும். வருமானம் மற்றும் லாபம் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பணவரவுக்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் குறிப்பிடத்தக்க லாபத்தைக் காண்பீர்கள். புதிய வருமானம் ஈட்டும் வாய்ப்புகளும் உருவாகும். உங்கள் வாழ்க்கை முறை மாறும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும், தொழிலை விரிவாக்கம் வாய்ப்புகளும் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories