Astrology: குரு பகவான் வீட்டில் அமரும் செவ்வாய்.! அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் 4 ராசிகள்.!

Published : Dec 03, 2025, 10:49 AM IST

Sevvai Peyarchi Palangal: டிசம்பர் 7ஆம் தேதி செவ்வாய் பகவான் விருச்சிக ராசியிலிருந்து வெளியேறி குரு பகவானுக்கு சொந்தமான தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
15
செவ்வாய் பெயர்ச்சி 2025

ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் தைரியம், வீரம், நிலம், சொத்துக்கள், செயல், சகோதரத்துவத்தின் காரகராக விளங்குகிறார். இவரின் பெயர்ச்சியானது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு பலன்களை அளிக்கும். அந்த வகையில் டிசம்பர் 7, 2025 அன்று செவ்வாய் பகவான் குரு பகவானின் தனுசு ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சியால் சில ராசிகள் அதிர்ஷ்டகரமான பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் என்பதால் இந்த பெயர்ச்சி உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். தொழில் அல்லது கல்வி நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த காரியங்கள் கைகூடும். உங்கள் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறத் துவங்கும். நிதி நிலைமை கணிசமாக மேம்படும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீகப் பயணங்கள் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கலாம். டிசம்பர் 7ஆம் தேதிக்குப் பிறகு நீங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களிலும் வெற்றியை ருசிப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

35
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் பெயர்ச்சி அதிர்ஷ்டத்தை தரவுள்ளது. டிசம்பர் 7 தொடங்கி ஜனவரி 16 வரை நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். புதிய சொத்துக்கள், நிலம், வீடு, வாகனம் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் உள்ளவர்களின் குறிப்பாக உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் பேச்சுத் திறமை அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பக்கூடும். பணத்தை சேமிக்கும் வாய்ப்புகள் உருவாகும். பழைய முதலீடுகளில் இருந்து குறிப்பிட தகுந்த லாபத்தை எதிர்பார்க்கலாம்.

45
தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி சுப பலன்களை அளிக்கும். செவ்வாய் உங்கள் ராசியின் லக்ன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால், உங்கள் மனதிலும், செயலிலும் புதிய ஆற்றல் பிறக்கும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் பலன்கள் கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு நிலையான முன்னேற்றம் உண்டாகும். புதிய தொடர்புகள் மூலம் நன்மை அடைவீர்கள். உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறுவதற்கான காலம் கைகூடும். இலக்குகளை அடைய உறுதியாக செயல்பட்டு வெற்றியைக் காண்பீர்கள்.

55
கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பெயர்ச்சி அதிக பலன்களை அளிக்கக் கூடியதாக இருக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து பண வரவு கிடைக்கும். தொழில், உத்தியோகம், வியாபாரம் ஆகியவற்றில் வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் காண்பீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த விஷயங்கள் கைக்கு வந்து சேரும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவியால் உங்கள் இலக்குகளை அடைவீர்கள். சமூகத்தில் உங்களின் மரியாதை மற்றும் கவுரவம் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் பணிக்காக பணியிடத்தில் பாராட்டுகளையும், புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories