Astrology: நவராத்திரியில் கோடீஸ்வர யோகத்தைப் பெறும் 3 ராசிகள்.! இவர்களுக்கு பண மழை கொட்டப் போகுது.!

Published : Sep 19, 2025, 04:59 PM IST

Navaratri Rasi Palangal: இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த புனிதமான காலத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
நவராத்திரி 2025

அம்பிகையின் 9 வடிவங்களை வழிபடுவதற்கு உகந்த காலம்தான் நவராத்திரி. இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 அன்று தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நவராத்திரி மத ரீதியாக மட்டுமல்ல கிரக மற்றும் வானியல் அடிப்படையிலும் மிகவும் நன்மை பயக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரியின் முதல் நாள் செவ்வாய் துலாம் ராசியிலும், சுக்கிரன் சிம்ம ராசியிலும், சூரியன் கன்னி ராசியிலும், சனி மீன ராசியும் இருப்பார்கள். மேலும் செப்டம்பர் 24 ஆம் தேதி சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரித்து செவ்வாய் கிரகத்துடன் மகாலட்சுமி ராஜயோகத்தையும் உருவாக்குகிறார்.

25
நவராத்திரியில் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்

சிறப்பு கிரக நிலைகள் மற்றும் அம்பிகையின் அளவில்லாத கருணை காரணமாக இந்த நவராத்திரி சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்க உள்ளது. இவர்கள் வணிகத்தில் செல்வம், சமூகத்தில் மரியாதை, தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் என பல நற்பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

35
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் நன்மை பயக்கும். உங்கள் குடும்பத்திற்காக ஏதாவது புதிதாக வாங்குவீர்கள். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் உங்களை தொந்தரவு செய்து கொண்டிருந்தால் அவை வெற்றிகரமாக நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். நிதி ஸ்திரத்தன்மை ஏற்படுவதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் முடிவுகளை எடுப்பதில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட காலமாக இருந்து வந்த உடல்நலப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் நிறைவேற்றி வெற்றி பெறுவீர்கள்.

45
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இந்த நவராத்திரி காலத்தில் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பீர்கள். காதல் உறவுகள் ஆழமாகும். புதிய தொழிலை தொடங்குவது மகிழ்ச்சியைத் தரும். ஆரோக்கியம் மேம்படும். கூட்டாக தொழில் செய்வது கணிசமான லாபத்தை அதிகரிக்கும். தடைப்பட்ட தொழில் திட்டங்கள் வெற்றி பெறும். உங்கள் வணிகத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இதன் காரணமாக லாபமும் இரட்டிப்பாகும். உங்கள் வணிகத்தில் புதிய மைல் கல்லை எட்டுவீர்கள். வேலை மாற்றம் அல்லது புதிய வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு விரும்பும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். நேர்முகத் தேர்வு முடித்துவிட்டு காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும்.

55
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நவராத்திரி பல சிறப்பு நன்மைகளை தரவுள்ளது. காதல் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை அனுபவிப்பீர்கள். வேலையில் உங்களுடைய திறமைகள் பாராட்டப்படும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும். நிதி ஆதாயங்கள் ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களையும் பெறுவீர்கள். உங்கள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கல்லூரி சேர்க்கைக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். உள்நாடு அல்லது வெளிநாட்டில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories